ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்.. உண்ணாவிரதம், ரயில் மறியல்! தொடர் போராட்டம் அறிவிப்பு
ராமநாதபுரம்: இலங்கை கடற்படையால் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். ஆகஸ்ட் 15 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம், ஆகஸ்ட் 19 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தவும் மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது.

எல்லை தாண்டி மேம்படுத்ததாக கூறிய ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை நேற்று கைது செய்தது. அதைத் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வப்போது மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 2,3 ஆண்டுகள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு வருவது தமிழக மீனவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரம் அனைத்து மீனவர்கள் சங்க கூட்டம் ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் நடைபெற்றது.
அதில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் இலங்கை கடற்படையால் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதை கண்டித்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக மாணவர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
மேலும், ஆகஸ்ட் 13 ஆம் தேதி தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தம் அருகே மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும், ஆகஸ்ட் 19 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் ரயில் மறியல் போராட்டம் நடத்தவும் மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தையும் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் இலங்கை கடற்படையினரைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் கால வரலாற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
-
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications