மீளாத்துயரில் மீனவர்கள்.. ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படைக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் வாபஸ்
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்திய உண்ணாவிரத போராட்டம் இன்று கைவிடப்பட்டதை அடுத்து ஒரு வாரம் கழித்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
ஒரு பக்கம் அண்டை மாநிலமான கர்நாடகாவால் காவிரி நதி நீர் முறையாக கிடைக்காமல் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள சூழலில் மறுபக்கம் அண்டை நாடான இலங்கை கடற்படை செய்து வரும் அட்டூழியங்களால் தமிழ்நாடு மீனவர்கள் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். பொருளாதாரத்தை பின் தங்கிய குட்டி நாடான இலங்கை மீனவர்கள் விசயத்தில் ஆட்டம் காட்டி வருகிறது. இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் துயரம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

எல்லை தாண்டி தமிழ்நாடு மீனவர்கள் மீன்பிடிப்பதாக கூறி அவர்கள் சுட்டுக் கொல்வது, கொடூரமாக தாக்கி அவர்களின் படகுகளை சேதப்படுத்தி வலைகளை அறுத்து அட்டூழியம் செய்வது, கைது செய்து 6 மாதங்களுக்கு மேல் சிறையில் அடைப்பது என இலங்கை கடற்படையினர் தொடர் தொல்லைகளை கொடுத்து வருகிறார்கள். இதற்கு மத்திய மாநில அரசுகள் முற்றுப்புள்ளி வைத்து பாதுகாப்பாக தாங்கள் மீன் பிடிக்க உதவ வேண்டும் என மீனவர்களும் மீனவர் சங்கங்களும் தொடர்ந்து பல முறை கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
ஒவ்வொரு முறை மீனவர் கைது சம்பவம் நடக்கும்போதும் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு பல முறை இது தொடர்பாக கடிதம் எழுதி உள்ளார். இலங்கை அரசிடம் மத்திய மாநில அரசுகள் தரப்பில் பல முறை தமிழ்நாடு மீனவர்கள் கைது தொடர்பாக கோரிக்கை வைத்தும் அவர்கள் அதை மதிக்கவில்லை. ஒவ்வொரு வாரமும் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்ந்து வருகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் மீன்பிடி தடை காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு சென்றவுடன் இலங்கை கடற்படை வேலையை தொடங்கியது. அன்றில் இருந்து எல்லா மாதமும் இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகிறது. கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரம் வந்ததை அடுத்து மீனவர்களை விடுவிப்பதாக தெரிவித்த இலங்கை அரசு, சில நாட்களிலேயே மேலும் சில தமிழ்நாடு மீனவர்களை கைது செய்தது. இந்த நிலையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்திலும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 20 ஆம் தேதி முதல் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிடும் நோக்கில் ராமேஸ்வரத்தில் இருந்து நடைபயணமும் மேற்கொண்டனர். 24 ஆம் தேதி முதல் உண்ணாவிர போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று போராட்டத்தை கைவிட்டு ஒரு வாரம் கழித்து கடலுக்கு மீன்பிடிக்க சென்று உள்ளார்கள்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications