சுவாதி கொலை வழக்கு: பிறந்த நாள் கொண்டாடிய 4வது நாளே கொலைகாரனாகிய ராம்குமார்
சென்னை: பிறந்த நாள் கொண்டாடிய 4வது நாளில் கொலையாளியாக மாறியுள்ளார், சுவாதி கொலையில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார்.
இன்போசிஸ் ஊழியர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இன்ஜினியரிங் பட்டதாரி ராம்குமார் 1992ம் ஆண்டு, ஜூன் மாதம் 20ம் தேதி பிறந்தவராகும்.

சுவாதியை அவர் கொலை செய்தது கடந்த ஜூன் 24ம் தேதி. அதாவது பிறந்த நாள் கொண்டாடிய நான்காவது நாளிலேயே இந்த கொடூர கொலையை செய்யும் மனநிலைக்கு ராம்குமார் வந்துள்ளார்.
ராம்குமாருக்கும் 8ம் எண்ணுக்கும் ராசியில்லை என்ற ஒரு தகவலும் பரவியுள்ளது. அவர் 1ம் தேதியான நேற்று கைது செய்யப்பட்டார்.
அவர் கைதான நாள் மற்றும் மாதத்தின் கூட்டுத்தொகை 8 என்று வருகிறது. ராம்குமார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள வார்டு எண்ணும் 8தான். மேலும், மேன்ஷனில் அவர் நிரப்பி கொடுத்த விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணின் கூட்டுத்தொகையும் 8 ஆகும்.












Click it and Unblock the Notifications