சுவாதி கொலை வழக்கு... சிபிஐ விசாரணை கோரி இன்று வழக்கு தொடர முடிவு!
சென்னை: பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் சிபிஐ விசாரனைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர உள்ளதாக ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜ் தெரிவித்துள்ளார்
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ந் தேதி பொறியாளர் சுவாதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டார்.

ஆனால் ராம்குமார் உண்மையான குற்றவாளி இல்லை என்று அவரது வழக்கறிஞர் ராம்ராஜ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாரின் தந்தை பரமசிவன் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இதில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கக் கோரி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமையன்று வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாகவும் முற்போக்கு வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்தவரும், ராம்குமாரின் வழக்கறிஞருமான ராம்ராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் 17 பேர் கொண்ட வழக்கறிஞர் குழு இதற்காக அமைக்கப்பட்டுள்ளதாகவும், இக் குழு புழல் சிறையில் ராம்குமாரை சந்தித்து வழக்கு தொடர்பான தகவல்களை கேட்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications