சுவாதி கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை மறைக்க முயற்சி: ராம்குமார் வழக்கறிஞர் குற்றச்சாட்டு!
சென்னை: இன்போசிஸ் மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் போலீசார் திட்டமிட்டு உண்மை குற்றவாளிகளை மறைக்க முயற்சிப்பதாக ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கடந்த ஜூன் 24ம் தேதி காலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் செங்கோட்டை அடுத்த டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் கடந்த 1ம் தேதி கைது செய்யப்பட்டு பின்னர் 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் ராம்குமாரை நுங்கம்பாக்கம் போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ராம்குமாரை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நுங்கம்பாக்கம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
ராம்குமாரை நீதிபதி முன்னர் ஆஜர் படுத்தி, நுங்கம்பாக்கம் ரயில்நிலையம் அருகே உள்ள வீடுகளில் கைப்பற்றப்பட்ட சிசிடிவியில் பதிவான காட்சிகளையும் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளையும் ராம்குமாரையும் நீதிபதி நேரில் ஒப்பிட்டு பார்ப்பதற்காகவே, ராம்குமாரை காவலில் எடுக்க போலீசார் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள மனு எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் ராம்ராஜ், ராம்குமாருக்கு எதிராக தடயங்களை உருவாக்கவும், ஆதரவாக உள்ள சாட்சிகளை அழிக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக வாதிட்டார்.
ராம்குமாரை சிசிடிவி காட்சிகளுடன் ஒப்பிட்டு பார்க்கவும், கையெழுத்தை ஒப்பிட்டு பார்க்கவுமே இந்த காவல் கேட்கப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, மனு மீதான தீர்ப்பை வரும் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராம்ராஜ் கூறுகையில், ராம்குமாருக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள தடயங்களை உறுதி செய்யவே ஒரு நாள் காவல் கேட்கப்பட்டுள்ளது. போலீசார் திட்டமிட்டு உண்மை குற்றவாளிகளை மறைக்க முயற்சி செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications