ராமநாதபுரத்தில் பாஜக கூட்டத்தில் தாக்கப்பட்ட இஸ்லாமியர்...அமைதிகாத்த தமிழிசை: வீடியோ
ராமநாதபுரத்தில் நடந்த பாஜக கண்டன ஆர்ப்பாடட்த்தில், முஸ்லிம் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டபோது தமிழிசை அதை தடுக்க எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தார்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பகுதி பாஜக செயலாளர் அஸ்வின்குமார் தந்தை தாக்கப்பட்டதைக் கண்டித்து நடந்த பொதுக்கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு, மாநிலத் தலைவர் தமிழிசை முன்பு இஸ்லாமியர் ஒருவர் தாக்கப்பட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம்பகுதி செயலாளர் அஸ்வின் குமார் என்பவரது தந்தை, அவருடைய செல்போன் கடையில் இருந்தபோது மர்மநபர்களால் தாக்கப்பட்டார். அதில் அவர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தாக்குதல் வழக்கில் மணிகண்டன், தஸ்வே ரவி, முத்துராமலிங்கம், தஸ்வே தவசிநாதன் மற்றும் சதீஸ் என 5 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. இருந்த போதும் பாஜகவினர் அவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று கூறுகின்றனர்.
இந்நிலையில் அஸ்வின் குமார் தந்தை தாக்கப்பட்டதைக் கண்டித்து ராமநாதபுரம், அரண்மனை பகுதியில் பாஜக மாநில தலைவர் தமிழிசை முன்னிலையில் கண்டன கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்தக் கூட்டத்தை இஸ்லாமியர் ஒருவர் செல்போனில் படமெடுத்தார். அதைக் கண்ட பாஜகவினர் அவரை தாக்கினர்.ஆனால் தமிழிசை அங்கிருந்த போதும் தாக்குதலைத் தடுக்க அவர் எதுவும் செய்யவில்லை.
தமிழகத்தில் பாஜகவினர் திட்டமிட்ட மதச் சண்டைகளை உருவாக்க முயன்று வருகின்றனர் என அரசியல் நோக்கர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications