ராணிப்பேட்டை மாப்பிள்ளைக்கு மிஸ்ஸான 'ராணி'.. இன்று கல்யாணம் நடக்க இருந்த நிலையில் மணமகள் ஓட்டம்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே இன்று கல்யாணம் நடைபெற இருந்த நிலையில், மணமகள் திருமணமே வேண்டாம் என்று ஓட்டம் பிடித்தார். திருமணத்தில் விருப்பம் இல்லை என போலீசில் போய் கூறியதால், திருமணத்தை நிறுத்திய போலீசார், அந்த பெண்ணை பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படும் ஒன்று என சொல்வார்கள். உண்மையில் பெரியவர்கள் தான் தங்கள் பிள்ளைகளுக்கு ஏற்ற ஜோடியை மணம் முடித்து வைப்பார்கள். காதலர்கள் அவர்களே தங்கள் ஜோடியை தேர்ந்தெடுப்பார்கள். திருமணங்களை பொறுத்தவரை கடைசி நேரத்தில் நிற்க வாய்ப்பு இல்லை.

மிகவும் அரிதாகவே திருமணங்கள் நின்று போகும். அதற்கு முக்கிய காரணம் மணப்பெண் திருமணத்திற்கு சம்மதித்திருக்க மாட்டார். பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய முயற்சித்திருப்பார்கள். அல்லது கடைசி நேரத்தில் மணப்பெண் அல்லது மணமகன், தங்களுடைய காதலன் அல்லது காதலியுடன் ஓடி போய் விடுவார்கள். ராணிப்பேட்டையில் கடைசி நேரத்தில் மணப்பெண் திருமணம் வேண்டாம் என்று ஓட்டம் பிடித்த காரணத்தால், மணமகன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளைஞருக்கு (30 வயது) 20 வயது பெண்ணை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடந்தது. இளைஞர் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். மணப்பெண்ணும் அந்த ஊரைச் சேர்ந்தவர் தான். இருவீட்டு பெற்றோரும் திருமண நிச்சயதார்த்தத்தை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முடித்தனர். அவர்களின் திருமணம் அதே பகுதியில் உள்ள முருகன் கோவிலில் இன்று (புதன்கிழமை) காலை நடைபெறுவதாக முடிவும் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அந்த இளம்பெண் நேற்று காலை அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பெண் இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ள கல்யாணத்தில் தனக்கு துளியும் விருப்பம் இல்லை. பெற்றோர் தன் விருப்பத்தை மீறி திருணம் செய்ய பார்க்கிறார்கள். அதனால் தான் நான் வீட்டை விட்டு வெளியேறினேன். மீண்டும் வீட்டுக்கு செல்வதற்கு விருப்பமில்லை. அரசு காப்பகத்திற்கு கூட செல்ல தயாராக உள்ளேன் என தெரிவித்தார். இதையடுத்து அவரது விருப்பத்தின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வாலாஜாவில் உள்ள விடுதிக்கு அவரை அனுப்பி வைத்தனர். இதனால் இருவீட்டாரின் பெற்றோரும், உறவினர்களும் செய்வதறியாது நொந்துபோனார்கள். கடைசி நேரத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்தியதால் மாப்பிள்ளை பெரும் சோகத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில் அந்த இளம்பெண் நேற்று காலை அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பெண் "இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ள கல்யாணத்தில் தனக்கு துளியும் விருப்பம் இல்லை. பெற்றோர் விருப்பத்தை மீறி திருணம் செய்ய பார்க்கிறார்கள். அதனால் தான் நான் வீட்டை விட்டு வெளியேறினேன். மீண்டும் வீட்டுக்கு செல்வதற்கு விருப்பமில்லை. அரசு காப்பகத்திற்கு கூட செல்ல தயாராக உள்ளேன்" என தெரிவித்தார். இதையடுத்து அவரது விருப்பத்தின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வாலாஜாவில் உள்ள விடுதிக்கு அவரை அனுப்பி வைத்தனர். இதனால் இருவீட்டாரின் பெற்றோரும், உறவினர்களும் செய்வதறியாது நொந்துபோனார்கள். கடைசி நேரத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்தியால் மாப்பிள்ளை பெரும் சோகத்தில் இருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications