சட்டங்கள் மாறாத வரை பலாத்காரங்கள் தொடரும்: குஷ்பு
சென்னை: சட்டங்கள் மாறாத வரை பலாத்கார சம்பவங்கள் நடக்கத் தான் செய்யும் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
தமிழக மகளிர் காங்கிரஸ் சார்பில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாநில தலைவி சாய்லெட்சுமி தலைமையில் நடந்த விழாவுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ராணி வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
விழாவில் நடிகை குஷ்பு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

பெண்
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் சக்தி உள்ளது. பெண்ணாக பிறந்ததற்கு நாம் எல்லாம் பெருமைப்பட வேண்டும்.

சாதனை
பெண்களால் எதையும் சாதிக்க முடியும். நான் திரைத்துறையில் இருப்பதால் எனது சாதனைகள் பிறருக்கு தெரிந்துள்ளது. இந்த சமூகத்தில் சாதித்துக் கொண்டிருக்கும் பெண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.

ஆணாதிக்கம்
நாட்டில் ஆணாதிக்கம் அதிகம் உள்ளது. பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவது இல்லை. அவர்களுக்கு பாதுகாப்பும் இல்லை.

பயம்
பெண்கள் சமுதாயத்திற்கு பயந்து வாழ்ந்து வருகிறார்கள். மனசாட்சிக்கு மட்டும் பயந்தால் போதும் என்று நான் கூறுகிறேன். கல்வி என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியம். அனைத்து குழந்தைகளையும் படிக்க வையுங்கள். ஆண் மற்றும் பெண் குழந்தைகளை பாகுபாடு இன்றி வேலை செய்ய வையுங்கள்.

கட்டுப்பாடு
பெண்களுக்கு தனியாக வெளியே செல்ல பயமாக உள்ளது. மாலை 6 மணிக்கு மேல் வெளியே செல்லக் கூடாது, இப்படி தான் ஆடை அணிய வேண்டும், ஆண்களிடம் பேசக் கூடாது என்று பல கட்டுப்பாடுகள் உள்ளது. எப்படி நடக்க வேண்டும் என்று பெண்களுக்கு தெரியும். உங்களின் மனசாட்சிக்கு சரி என்று படுவதை செய்யுங்கள்.

பலாத்காரம்
நம் நாட்டில் 20 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள். சட்டங்கள் மாறாத வரை பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவது தொடரத் தான் செய்யும். இல்லத்தரசி என்று கூற வெட்கப்பட வேண்டாம். உலகை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குள் லட்சுமி, துர்க்கை இருக்கிறாள் என்றார் குஷ்பு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications