Doomsday fish: பாம்பனில் மீனவர்கள் வலையில் சிக்கிய அதிசய டூம்ஸ்டே மீன்! சுனாமிக்கான அறிகுறி?
ராமேஸ்வரம்: பாம்பன் மீனவர்கள் வலையில் அபூர்வ டூம்ஸ்டே மீன் சிக்கியுள்ளது. ஆழ் கடலில் மட்டுமே இருக்கும் இந்த மீன்கள் தற்போது சிக்கியிருப்பதால் ஏதேனும் பேரழிவு ஏற்படுவதற்கான அறிகுறியா என மக்கள் அச்சமடைந்து வருகிறார்கள்.
ராமேஸ்வரம் மாவட்டம், பாம்பனில் மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றிருந்தனர். மீன்களை பிடித்துக் கொண்டு நேற்று அவர்கள் கரை திரும்பினர். அப்போது ஒரு விசைப்படகு மீனவர்களின் வலையில் இருக்கும் மீன்களை பிரித்தனர்.

அதில் அரியவகை டூம்ஸ்டே மீன் (இறுதி நாள்) சிக்கியிருந்தது. இது சுமார் 5 அடி நீளம் கொண்டதாக இருந்தது. இந்த வகை மீன்களை ஆசிய கடல் பகுதிகளில்தான் இருக்கும். அது போல் மிகவும் ஆழ்கடல் பகுதிகளில் மட்டுமே வசிக்கும் தன்மை கொண்டவை.
டூம்ஸ்டே மீன்
டூம்ஸ்டே மீன் பிடிபட்டால் உலகில் எங்காவது பேரழிவு ஏற்படக் கூடும் என்பது ஜப்பானிய மக்களின் ஒருவித நம்பிக்கை ஆகும். ஆனால் இது மூடநம்பிக்கை என்கிறார்கள். இதற்கான எந்த அறிவியல் பூர்வ ஆதாரங்களும் இல்லை இப்படிப்பட்ட சூழலில் டூம்ஸ்டே மீன், சிக்கியிருந்தது சமூகவலைதள பக்கத்தில் விவாத பொருளானது. ஆனால் இந்த அரிய வகை மீன் மிக குறைந்த விலைக்கே விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
துடுப்பு மீன்
இது துடுப்பு மீன் (Oar Fish) என்றும் அழைக்கப்படுகிறது. இதன் எடை சுமார் 10 கிலோ, நீளம் 5 அடியாகும். முதல்முறையாக இந்த மீன் பிடிபட்டுள்ளதால் இதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர். இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது: துடுப்பு மீன் பட்டையாக ஆரஞ்ச் நிற துடுப்புகளை கொண்டவை.
மித வெப்ப மண்டல கடல்
இது மிதவெப்ப மண்டல கடல் பகுதிகளில் அரிதாகவே இருக்கும். அதிகபட்சம் 16 மீட்டர் நீளம் வரை வளரக் கூடியது என்றனர். இந்த டூம்ஸ்டே மீன் மீனவர்கள் வலையில் பிடிபட்டாலோ இல்லை கரை ஒதுங்கினாலோ நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரழிவுகள் ஏற்படும் என்பது பண்டைய கால ஜப்பானியர்களின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் இதில் உண்மை இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
ஜப்பானில் 2010ல் நடந்தது என்ன
ஜப்பானில் கடந்த 2010 ஆம் ஆண்டு இறந்த நிலையில் டூம்ஸ்டே மீன் கரை ஒதுங்கியது. அவ்வாறு நடந்த சில மாதங்களில் அதாவது அடுத்த ஆண்டு 2011, மார்ச் மாதம் டோஹோகுவில் நிலநடுக்கமும் சுனாமியும் ஏற்பட்டு 15 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இறந்துவிட்டனர். ஃபுகுஷிமாவில் அணு ஆயுத பேரழிவும் நடந்தது.
13 அடி நீளம் கொண்ட மீன்
அது போல் 2022 ஆம் ஆண்டு 13 அடி நீளம் கொண்ட இந்த துடுப்பு மீன் தைவான் கடற்கரையில் கரை ஒதுங்கியது. அப்போது நிலநடுக்கம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. 2023 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸில் இந்த மீன் இறந்து கரை ஒதுங்கிய நிலையில் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டு அது 6.1 என ரிக்டர் அளவில் பதிவானது.
ஆதாரம் இல்லை
இந்த ஆண்டு கலிபோர்னியா கடற்கரையில் உயிருடன் இந்த மீன் தென்பட்டதை சிலர் புகைப்படம் எடுத்திருந்தனர். இத்தனை சம்பவங்கள் நடந்திருந்தால் இதனால்தான் நிலநடுக்கம், சுனாமி ஏற்பட்டது என்பதற்கான அறிவியல் பூர்வ காரணங்கள் ஏதும் இல்லை.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications