ரயில் நிலையத்தில் திடீர் "சுகாதார ஆய்வாளராக" மாறிய இவரை பாருங்களேன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொது இடங்களில் விற்கப்படும் உணவு தரமானதா இல்லையா கண்டறிய சுகாதார துறையினரும், அதை வாங்கும் நுகர்வோரும் சுவைத்து பார்க்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறுங்க.

பல ஆயிரம் செலவு செய்து உணவு பரிசோதனைக் கூடங்களில் கொடுத்து சோதனை செய்ய வேண்டும் என்றாலும் அதெல்லாம் வேஸ்டுங்க.

Rat tests the food in Erode Railway station

நாம் மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் போது உயிரியல் பாடத்தில் நாம் சோதனைக்கு உட்படுத்தும் அதே எலியை கொண்டும் சோதனை செய்யலாம் என்பதை உணர்த்தும் படம் ஒன்று வாட்ஸ் ஆப்பில் வைரலாகி வருகிறது.

ஈரோடு ரயில் நிலையத்தில் உணவு பொட்டலங்களுடன் காத்து கிடக்கிறார் ஒரு வியாபாரி. அந்த சமயம் பார்த்து எலியானது உணவை ருசித்து சோதனை செய்கிறது. நல்ல வேளை நாம் தப்பிச்சோம்டா சாமி..... இந்த லட்சணத்தில் சூடானது, சுவையானது என கூவி கூவி அழைப்பது வேறு....

என்ன எலியாரே ஒரு பாக்கெட் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது புரிகிறதா?

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A rat tastes food packets in Erode Railway Station from a merchant.
Please Wait while comments are loading...