ரத யாத்திரையின் போது கலவரம் ஏற்படும் வகையிலான வாசகங்கள் இருந்தால் தடுக்கப்படும்.. சட்டசபையில் ஓபிஎஸ்
ரத யாத்திரையின் போது கலவரம் ஏற்படும் வகையிலான வாசகங்கள் இருந்தால் தடுத்து நிறுத்தப்படும் என சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ரத யாத்திரையின் போது கலவரம் ஏற்படும் வகையிலான வாசகங்கள் இருந்தால் தடுத்து நிறுத்தப்படும் என சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் வழியாக செல்லும் விஎச்பியின் ரத யாத்திரையை தடுக்கக்கோரி சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்ட அவர்கள் கைது செய்யப்பட்டனர். முன்னதாக ரத யாத்திரை குறித்த ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்றார்.
இதனை பொறுத்துக்கொள்ளமுடியாமல் ஸ்டாலின் செயல்படுகிறார் என்றும் ஓபிஎஸ் குற்றம்சாட்டினார். புரிந்துகொண்டும் புரிந்துகொள்ளாதது போல் எதிர்க்கட்சித் தலைவர் செயல்படுதாகவும் ஓபிஎஸ் தெரிவித்தார்.
ரத யாத்திரையை எதிர்க்கட்சிகள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, கம்யூனிஸ்ட் ஆளும் கேரளா வழியாக ரத யாத்திரை வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் நடைபெறுவது பாஜக ஆட்சியா? அதிமுக ஆட்சியா என ஸ்டாலின் கேட்கலாமா என்றும் ஓபிஎஸ் கேள்வி எழுப்பினார். ரத யாத்திரையின் போது கலவரம் ஏற்படும் வகையிலான வாசகங்கள் இருந்தால் அது தடுத்து நிறுத்தப்படும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications