ராஜீவ் கொலை வழக்கு: ரவிச்சந்திரன் 4-வது முறையாக பரோலில் வெளிவந்தார்!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் இன்று பரோலில் வெளி வருகிறார்.
மதுரை : முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் பரோலில் 4-வது முறையாக வெளி வந்தார். ரவிச்சந்திரன், தன்னுடைய வீடு, பத்திரப்பதிவு அலுவலகம் தவிர வேறு எங்கும் செல்லக்கூடாது என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ரவிச்சந்திரன். சொத்து பாகப்பரிவினை செய்வதற்காக தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று ரவிச்சந்திரன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

பெற்றோர் உடல்நிலை சரியில்லாத காரணத்தை கூறி 3 நாட்கள் பெற்றோர் உடல்நிலை சரியில்லை என்று பரோலில் சென்றிருந்தார். இதே போன்று சொத்துகள் பாகப்பிரிவினை தொடர்பாக ஏற்கனவே ஒரு முறை பரோலில் சென்றிருக்கிறார்.
ஆனால் அப்போது போலீசார் வீட்டிலேயே வைத்திருந்ததால் ஆவணங்களை பத்திரப்பதிவு செய்ய முடியவில்லை. எனவே சொத்துகளை பாகப்பிரிவினை செய்வதற்காக ஒரு மாதம் சிறை விடுப்பு கோரி ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இன்று முதல் 15 நாட்களுக்கு நிபந்தனைகளுடன் பரோல் விடுப்பை ரவிச்சந்திரனுக்கு அளித்துள்ளது. இதனையடுத்து ரவிச்சந்திரனை விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.
சிறையில் இருந்து இன்று 4-வது முறையாக பரோலில் வெளிவந்த ரவிச்சந்திரன் தன்னுடைய அருப்புக்கோட்டை வீட்டிற்கு செல்கிறார். ரவிச்சந்திரன் ஊடகங்களை சந்திக்கக் கூடாது, எலக்ட்ரானிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது, தடை செய்யப்பட்ட இயங்கங்களின் தலைவர்களை சந்திக்கக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஊடகங்களை சந்திக்கக் கூடாது, எலக்ட்ரானிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் ரவிச்சந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளன. மத்திய சிறைச்சாலையில் கடுமையான கெடுபிடிகள் இருப்பதால் உறவினர்கள் யாரும் வரவில்லை, வழக்கறிஞர்கள் மட்டுமே ரவிச்சந்திரனை வெளியே அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications