இப்ப வந்துடுவானுங்கல்ல என் சிங்கக் குட்டிக... கலகலக்க வைக்கும் "கமெண்டர்"கள்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லேசாக தட்டி விட்டால் போதும், பகபகவென்று பற்றி எரிந்து பாய்ந்து விடுவார்கள் நம் வாசகர்கள்.

சாதா விஷயத்தை ஸ்பெஷல் தோசை அளவுக்கு பார்க்கும் மக்கள் கையில் இப்போது ஜெயலலிதா கைது, ஓ.பன்னர்செல்வம் முதல்வர் என்று ஏகப்பட்ட ஜிலேபி ஐட்டங்கள் கிடைத்துள்ளன. விடுவார்களா.. பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் காமெடிக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.

செய்திகளிலும் கூட ஏகப்பட்ட கமெண்டுகள் குவிகின்றன. இடிச்சபுளி செல்வராஜ் கூட இதைப் படித்தால் விழுந்து விழுந்து குமரி முத்து மாதிரி சிரிப்பார்...

அந்த சிரிப்பு முத்துக்களிலிருந்து சில.. உங்களுக்காக..!

மலையாளியின் கருத்து

மலையாளியின் கருத்து

மலையாளி என்ற பெயரில் ஒரு வாசகரின் கருத்து இது - மை லார்ட் உங்களுக்குத் தெரியாத சட்டம் இல்லை. அது எது சிறந்த சட்டமோ, அதை குற்றவாளிக்குத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்....

என்டாளன் (நல்ல பெயர் .. நல்ல பெயர்)

என்டாளன் (நல்ல பெயர் .. நல்ல பெயர்)

அட இப்ப வந்துடுவானுங்கல்லே என் சிங்ககுட்டீங்க, ஜாமீனோட - அப்படின்னு வடிவேலு சொல்ற காமெடி போலவே ஆயிடுச்சு

வக்கீல் வண்டு முருகனை வேணும்னா...

வக்கீல் வண்டு முருகனை வேணும்னா...

இது ராஜாவின் கருத்து - வக்கீல் வண்டு முருகனை வேணும் என்றால் try பண்ணி பாருங்களேன்...அம்மாவை சீக்கிரம் வெளிய கொண்டு வந்துடலாம்..

லங்கன் ஜோசியர்!

லங்கன் ஜோசியர்!

லங்கன் என்ற பெயரில் ஒருவர் ரொம்ப சீரியஸாக ஜோசியமே சொல்லியுள்ளார். அவர் சொல்வது என்னவென்றால், - அந்த ஜோதிடர் சொல்வது எதுவும் பலிக்காது. ஜெயலலிதாவுக்கு இப்போது நடப்பதெல்லாம் சனி பஹவானின் திருவிளையாடல்தான். தீர்ப்புக்குமுன் திருநெல்லாறு குளத்தில் நீராடி சனிபஹவான் கோயிலில் அம்மா பரிகாரம் செய்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. நான் ஏற்கனவே இரு தடவைகள் இப்பகுதியில் சொன்னதுபோல் மீண்டும் சொல்லுகிறேன் Dec .12, 2014 க்குப்பிறகு அம்மாவுக்கு நல்லது நடக்கும், .அதற்கு முன் எந்தப்பெரிய வக்கீலாலும் அம்மாவை Bail இல் வெளியே எடுக்கமுடியாது. அம்மா ஆட்சி தொடரும். ஆறு வருடத்தில் 100% நாட்டின் பிரதமராக அம்மா வருவார்.

சாம்..

சாம்..

சாம் என்பவர் தெரிவித்த கருத்து - ஐயோ பாவம். இவர் முதல்வராய் எதுவும் செய்வார் என்று அந்தக் கட்சியினர் கூட எதிர்பார்க்க மாட்டார்கள். (இது ஓ.பன்னீர் செல்வம் குறித்த கருத்து)

சுவாமிஜி சொல்வதைக் கேளுங்க!

சுவாமிஜி சொல்வதைக் கேளுங்க!

சுவாமிஜி என்ற பெயரில் வந்த கமெண்ட் இது - ஐயா "கண்ணீர்" செல்வம் அவர்கள் ஆட்சியில் தமிழகம் படுவேகமாக முன்னேறிக் கொண்டுள்ளது. பாலாறும், தேனாறும் ஓடுகிறது. பவர் கட் பிரச்சனை இல்லை. என்ன வேலைக்கு ஆட்கள் கிடைப்பதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. ஆட்கள் எல்லோரும் உண்ணாவிரதம், மனிதசங்கிலி, மண்சோறு சாப்பிடுதல், மொட்டை அடித்தல், போஸ்டர் ஒட்டுதல், பஸ் கண்ணாடி உடைததல், பெங்களுரு சுற்றுலா செல்லுதல் என்று பிஸியாக இருக்கறாங்க.

இதெல்லாம் ரொம்ப ஓவர்

இதெல்லாம் ரொம்ப ஓவர் "நான் சிகப்பு மனிதன்"!

நான் சிகப்பு மனிதன் என்ற பெயரில் ஒருவரது கமெண்ட் இது - என்னது பன்னீர் முதலைமைச்சரா? எம்ஜிஆருக்கு பிறகு நெடுஞ்செழியன் தானே அந்த பொறுப்புக்கு வரணும்..? என்னய்யா ஒரே குழப்பமா இருக்கு.?

கூட்டத்தோடு கூட்டமாக திமுகவுக்கு ஒரு குத்து!

கூட்டத்தோடு கூட்டமாக திமுகவுக்கு ஒரு குத்து!

தாவூத் செல்வம் என்பவர் கூட்டத்தோடு கூட்டமாக திமுகவையும் ஒரு குத்து குத்தி விட்டுப் போயுள்ளார். அவரது கமெண்ட் - அண்ணே, திமுகவில் கூட அண்ணாவுக்கு அப்புறம் நெடுஞ்செழியன்தான் வந்திருக்கணும்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க. ஒரே குழப்பமா இருக்கு.

அடேங்கப்பா.. என்னா ஒரு சிந்தனை!

அடேங்கப்பா.. என்னா ஒரு சிந்தனை!

Anonymous என்ற பெயரில் வந்த கமெண்ட் இது - ஓ.பன்னீர்செல்வம் சிலீபெர் செல் முதலமைச்சர். ஆர்டர் வரும் வரும் என்று காத்து இருப்பார். ஆர்டர் வரவில்லை என்றால் அப்படியே செயலிழந்து விடுவார். (துப்பாக்கிப் படத்தை டெய்லி ரெண்டு வாட்டி பார்ப்பவர் போல இவர்)

மண்டைல ஒரு குத்து (சத்தியமா இது கமெண்ட் அடித்தவரின் பெயர்தான்)

மண்டைல ஒரு குத்து (சத்தியமா இது கமெண்ட் அடித்தவரின் பெயர்தான்)

MandailaOruKuttu என்ற பெயரில் எழுதியவரின் கருத்து இது - இந்த அர கொர ஜோசிய பசங்க தொல்ல தாங்க முடியல. எதையுமே முன்ன சொல்ல மாட்டானுவ. அப்பறம் நாம் முன்னமே சொன்னோம் -ம்பான் . தேதி காலன்டர மொதல்ல பாருங்க அப்பறம் புருடா உடுங்க

கடைசித் தமிழன் கடும் காட்டம்!

கடைசித் தமிழன் கடும் காட்டம்!

கடைசித் தமிழன் என்பவரின் கருத்து இது - ''சிறை வளாகத்தினை அமர்களப்படுத்தி வருகின்றனர் அதிமுகவினர்''. அறிவுசார் தரப்பினர் என்று தங்களை பீற்றிக்கொள்ளும் பத்திரிகை மற்றும் ஊடகங்கள், இது போன்ற குருட்டு வெறியர்களுக்குக் கொம்பு சீவும் சல்லித்தன வர்ணனைகளை தவிர்க்கும்படி வேண்டுகிறேன்.

எல்லா கமெண்ட்டுகளையும் போட முடியாமைக்கு வருத்தங்கள்... இனி அடிக்கடி கமெண்ட் based stories போட சொல்லிட்டாரு எங்க எடிட்டர்..

ஆமாய்யா.. நான்தான் பேசுறேன்!

ஆமாய்யா.. நான்தான் பேசுறேன்!

ஆமாய்யா.. நான்தான் பேசுறேன்!

இதுக்கு விளக்கமே தேவையில்லை!

இதுக்கு விளக்கமே தேவையில்லை!

இதுக்கு விளக்கமே தேவையில்லை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+