அவர் 'புரட்டு'க் கலைஞன்.. 'புரட்சிக் கலைஞர்' அல்ல!- சுந்தரராஜன் கண்டுபிடிப்பு!
Subscribe to Oneindia Tamil

மதுரை மேற்கு ஒன்றியம் சார்பில் அதிமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அமைச்சர் செல்லூர் ராஜு இதற்குத் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் எம்.எல்.ஏ சுந்தரராஜனும் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் சுந்தரராஜன் பேசுகையில், அதிமுகவின் பல கூட்டங்களில், நான் கலந்து கொண்டேன்; ஆனால், பேசியது கிடையாது. இந்த கூட்டத்தில் எனக்கு பேச வாய்ப்பளித்த அமைச்சருக்கு நன்றி.
நான் பேசுவதற்கு அஞ்சவில்லை; அதில் ஒரு சட்டச் சிக்கல் இருக்கிறது.
அவர் (அதாவது தேமுதிக தலைவர் விஜயகாந்த்) புரட்சி கலைஞன் இல்லை. "புரட்டு' கலைஞன். அவர் 18 தொகுதிகளில் போட்டி யிட்டாலும், ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. நாற்பது தொகுதிகளிலும் ஜெயலலிதா தான் வெற்றி பெறுவார் என்றார் சுந்தரராஜன்.












Click it and Unblock the Notifications