கச்சத்தீவை மீட்டால் மட்டும் மீனவர்கள் பிரச்சினை தீர்ந்து விடாது - பொன். ராதாகிருஷ்ணன்
கச்சத்தீவை மீட்டு விட்டால் மட்டும் மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடாது என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மதுரை: ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் மீனவர் பிரிட்ஜோ படுகொலைக்கு நீதி கேட்டு மூன்று நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இது குறித்து கருத்து கூறியுள்ள மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கச்சத்தீவை மீட்டால் மட்டும் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடாது என்று தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மத்திய அரசின் உண்மையான முயற்சிகளை போராட்டக்குழுவினர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். மீனவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது.

உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க தமிழர்கள் ஒன்று சேரலாம். அதே நேரத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் ராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்துவதோடு கச்சத்தீவை மீட்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். கச்சத்தீவை மீட்பதன் மூலம் மட்டும் மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடாது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நாடுமுழுவதும் பயங்கரவாதிகள் மாறுவேடங்களில் ஊடுருவியுள்ளதாக கூறினார். மேலும் அவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதே தான் எச்சரித்ததாகவும் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications