சென்னையில் மீண்டும் கனமழை: செல்போன் சேவை பாதிப்பு - அச்சத்தில் மக்கள்
சென்னை: சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது. 40 மணிநேரம் கொட்டித்தீர்த்த கனமழையால் தலைநகரமே வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. தரையை காணமுடியவில்லை எங்கு பார்த்தாலும் தண்ணீர்தான். செல்போன் சேவை, தொலைபேசி சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
காலையில் சிலமணிநேரங்கள் மழை நின்றது. இதோடு மழை நின்றுவிடும் என்று சந்தோசப்பட்ட சென்னைவாசிகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கும் வகையில் மீண்டும் தொடங்கியுள்ளது.

அம்பத்தூர் தொழிற்பேட்டை
விடாமல் கொட்டிய மழையால் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஆலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆவடி வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் 2000 வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

வளசரவாக்கம் மூழ்கியது
வளசரவாக்கத்தில் ராதாநகர், லட்சுமிநகர், அன்பு நகர், வேலன் நகர் பகுதிகளில் மழை நீர் மூன்றடிக்கும் மேல் தேங்கியுள்ளது. ஏற்கனவே கடந்த 20 தினங்களுக்கு முன்பு பெய்த மழையில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசிய நிலையில் மீண்டும் கழுத்தளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

ராணுவக்குழுக்கள்
கனமழையால் தத்தளிக்கும் சென்னை புறநகரில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க மேலும் 4 ராணுவ குழுக்கள் வரவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடரும் கனமழை
தமிழகத்தில் கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்தியாவின் கடலோர பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டும் மழை
திங்கட்கிழமை தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை 40 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழை சில மணிநேரங்கள் மட்டுமே ஓய்வெடுத்தது. இதனால் மக்கள் அதிர்ச்சிடைந்திருந்த நிலையில் மீண்டும் கனமழை கொட்டி வருகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications