உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் மேனேஜர் மீது தாக்குதல்: சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்
சென்னை: ரெட் ஜெயண்ட் மூவிஸ் அலுவலக மேலாளர் சரவணமுத்து தாக்கப்பட்டது குறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் திமுக எம்.எல்.ஏ. கு.க. செல்வம் புகார் அளித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸின் மேலாளராக இருப்பவர் சரவணமுத்து. கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே உள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் அலுவலகம் முன்பு அவர் இன்று தாக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக அவர் இரண்டு முறை தாக்கப்பட்டுள்ளார். அது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று சரவணமுத்து தாக்கப்பட்டது குறித்து ஆயிரம்விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. கு.க. செல்வம் மற்றும் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தனர்.
அவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் இருந்த கூடுதல் கமிஷனர் சேஷசாயிடம் நடந்தது குறித்து விளக்கமாக தெரிவித்து புகார் மனுவை அளித்துள்ளனர். இம்முறையாவது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் ஆணையர் வாக்குறுதி அளித்ததாக செல்வம் மற்றும் பரந்தாமன் தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications