தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் 50 சதவிகிதமாக குறைந்தது
சென்னை: தமிழ்நாட்டில் குழந்தைகள் இறப்பு விகிதம் 50 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாக தெரிய வந்திருக்கின்றது. மாநில அரசுகளால் கையாளப்படும் பொது சுகாதார முறைகளே இத்தகைய முன்னேற்றத்திற்குக் காரணம் என்று கருதப்படுகின்றது.
குழந்தை இறப்பு விகிதம் என்பது ஒரு வருடத்தில் பிறந்த ஆயிரம் குழந்தைகளில் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் கணக்கிடுவதாகும்.
இது சுகாதார சேவைகள், ஊட்டச்சத்து அளவு, வறுமை மற்றும் மக்களின் கல்வி நிலை போன்றவற்றில் ஒரு முக்கியக் குறியீடாக விளங்குகின்றது.

ஐ.நா. அமைப்பு
கடந்த 2000ஆவது ஆண்டுத் துவக்கத்தில் ஐ.நா அமைப்பு, குழந்தைகளின் இறப்பு விகிதம் உலக நாடுகளில் குறைக்கப்பட வேண்டும் என்பதை தன்னுடைய சுகாதாரக் கழகத்தின் வளர்ச்சி இலக்குகளில் ஒன்றாகக் கொண்டிருந்தது. இதற்கான கெடுவாக 2015 ஆம் வருடத்தினையும் அந்த அமைப்பு குறிப்பிட்டிருந்தது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு
தற்போது கடந்த 2012ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகம் மூலம் மாதிரி பதிவுத் திட்டத்தின்கீழ் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி இந்தியாவின் மொத்த மாநிலங்களிலும் குழந்தை இறப்பு விகிதம் மூன்றில் ஒரு பகுதியாகக் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிரா, பஞ்சாப்
இவற்றுள், மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா போன்ற மாநிலங்களில் குழந்தை இறப்பு விகிதம் 40 சதவிகிதம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு
ஆனால் தமிழ்நாட்டிலோ இது 50 சதவிகிதமாகக் குறைந்துள்ளது தெரிய வந்திருக்கின்றது. மாநில அரசுகளால் கையாளப்படும் பொது சுகாதார முறைகளே இத்தகைய முன்னேற்றத்திற்குக் காரணம் என்று கருதப்படுகின்றது.

இறப்பு விகிதம் குறைவு
கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் இந்த இறப்பு விகிதத்திற்கான இடைவெளி தொடர்ந்து காணப்படும்போது இறப்பு விகிதம் குறைந்து வருவதும் இந்தக் கணக்கீட்டின் மூலம் தெளிவாகத் தெரிய வந்துள்ளது.

ஊட்டச்சத்து திட்டங்கள்
தமிழ்நாடு அரசின் பரந்த மற்றும் சிறந்து காணப்படும் சுகாதார சேவைகளும், ஊட்டச்சத்து திட்டங்களும் குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைத்து மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தை முன்னணியில் நிறுத்தியுள்ளது.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications