ஓட்டுக்கு பணம் தரும் வேட்பாளர்களுக்கு 6 ஆண்டு தடை - தேர்தல் ஆணையம் பரிந்துரை
ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட 6 ஆண்டு தடை விதிக்கும் சட்ட திருத்தம் கொண்டு வர தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
சென்னை: வாக்காளர்களுக்கு ஓட்டு போட பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.
நாடுமுழுவதும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரமும் அதிகரித்து விட்டது. தமிழகத்தில் திருமங்கலம் இடைத்தேர்தல் பார்முலா தொடங்கி ஆர்.கே. நகர் வரை ஓட்டுக்கு பணம் கொடுப்பது அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கான சட்ட விதிமுறைகளை கடுமையாக்கவேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

6 ஆண்டுகள் தடை
இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம், மத்திய சட்ட அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளதாகவும், அதில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்த நாளில் இருந்து அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும் என பரிந்துரை செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சமீப காலமாக தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் வருவதால், சட்ட அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஓட்டுக்கு பணம்
ஒவ்வொரு தேர்தலையும் எந்தவித பிரச்சினையும் இன்றி அமைதியான முறையில் நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் முனைப்புடன் பணியாற்றி வருகிறது. முன்பெல்லாம் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டு அதன் காரணமாக அசாதாரண சூழல் உருவானால் மட்டுமே தேர்தலை ரத்து செய்யும் நிலை ஏற்படும்.
ஆனால் சமீபகாலமாக, ஓட்டுக்கு பணம் கொடுக்கும் காரணத்தால் அசாதாரண சூழல் ஏற்படுவதாக கூறி தேர்தலை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது.

தமிழக தேர்தல்கள்
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிகளின் பொதுத்தேர்தலையும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலையும் தள்ளிவைக்கும் நிலை ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் கடிதம்
ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை முற்றிலும் தடுத்து நிறுத்த தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் உருவான புதிய யோசனையை தெரிவித்து, அதற்காக சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் கமிஷன் கடிதம் எழுதி இருக்கிறது.

குற்றச்சாட்டு
அதில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்ட திருத்தத்தை கொண்டு வருமாறும் மத்திய சட்ட அமைச்சகத்தை தேர்தல் கமிஷன் வலியுறுத்தி உள்ளது.

தேர்தல் கமிஷனின் நம்பிக்கை
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவானால் தேர்தலில் பணநாயகத்துக்கு வழியின்றி ஜனநாயகம் தழைத்தோங்கும் என்பது தேர்தல் கமிஷனின் நம்பிக்கை. என்றாலும் சட்ட அமைச்சகம்தான் இதுபற்றி பரிசீலித்து முடிவு எடுக்கும். சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டால் ஓட்டுக்கு பணம் வாங்குகிறவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது, குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள் மட்டுமே, 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications