டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி, கெய்ல் ஆய்வு... இடைக்காலத் தடையை நீக்கியது பசுமைத் தீர்ப்பாயம்
சென்னை : காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி மற்றும் கெய்ல் நிறுவனங்கள் ஆய்வு நடத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் தொடர்ந்த வழக்கில், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கும் பணிகள் நடைபெற்றால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் , கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு எடுப்பதற்கு ஆய்வு உள்ளிட்ட பூர்வாங்க பணிகளைத் தொடர ஓ.என்.ஜி.சி மற்றும் கெய்ல் நிறுவனங்களுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அதில் மீத்தேன் எடுக்க எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை என இரு நிறுவனங்களும் விளக்கமளித்ததை தொடர்ந்து, ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள விதித்திருந்த தற்காலிக தடையை தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் நீக்கி உத்தரவிட்டது. மேலும், வரும் 18ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் ஏற்கனவே போராட்டங்கள் நடத்திய விவசாய அமைப்பினர், பொதுமக்கள் கொந்தளித்துள்ளனர். மீண்டும் போராட்டங்களை நடத்த அவர்கள் தயாராகி வருகின்றனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications