சிவாஜி கணேசன் சிலையை அகற்றுவது எப்போது? அரசுக்கு ஹைகோர்ட் ஒரு வாரம் அவகாசம்
சென்னை: சென்னை காமராஜர் சாலையில் காந்தி சிலை எதிரே உள்ள சிவாஜி கணேசன் சிலை, போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், இதுகுறித்து முடிவெடுக்க ஒருவாரம் அவகாசம் வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் அரசு கோரியது. இதையடுத்து வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் ஒருவாரத்துக்கு தள்ளிவைத்தது.
இது தொடர்பாக சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், "சென்னை கடற்கரை சாலையில் காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை என மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் காந்தி சிலைக்கு எதிரே வைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசன் சிலை வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் அதனை வேறொரு இடத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இவ்வழக்கில் போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், நடிகர் சிவாஜி கணேசன் சிலை வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகத்தான் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து சிவாஜி கணேசன் சிலையை தமிழக அரசு அகற்ற முடிவு செய்துவிட்டதாக கூறி அரசியல் தலைவர்களும், சிவாஜி கணேசன் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சிவாஜி கணேசன் சிலையை அகற்றுவது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனிடையே தமிழக அரசு முடிவெடுக்காததால், உயர் நீதிமன்றத்தில் நாகராஜன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், சிவாஜி கணேசன் சிலை, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த இந்த உயர்நீதிமன்றம், சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என்ற என்னுடைய கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி இந்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த உயர்நீதிமன்ற உத்தரவை பரிசீலிக்காத தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ராஜீவ்ரஞ்சன் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை கடந்த 5ம் தேதி விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார் அக்னிகோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அரசு வக்கீல் காலஅவகாசம் கேட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை வருகிற செப்டம்பர் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இவ்வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஸ் அக்னி கோத்ரி, சசிதரன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து அரசு பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்த நிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி, இந்த வழக்கில் அரசின் நிலைப்பாடு என்னவென்று கேட்டு தெரிவிக்க ஒருவாரம் அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து, வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications