Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்த்ரைடிஸ்: கை, கால் மூட்டு வலி இருக்கா? உங்க ஜாதகத்தில் சனி எங்க இருக்கார்னு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்த்ரைடிஸ் எனப்படும் முடக்குவாதம் இன்றைக்கு சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அதிகம் பாதிக்கிறது . மூட்டுவலி தைலம், களிம்புகளுக்கான விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் அதிகம் ஒளிபரப்பாகின்றன. அந்த அளவிற்கு மூட்டு வலியினால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

மூட்டுவலியினால் ஏற்படும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே உலக சுகாதார நிறுவனம் (WHO)அக்டோபர் 12ம் தேதியை ஆண்டுதோறும் உலக ஆர்த்ரைடிஸ் தினமாக ( முடக்குவாத தினம்) அனுசரித்து வருகிறது. முடக்குவாத நோய் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காகவே 1996ம் ஆண்டிலிருந்து அக்டோபர் 12ம் தேதியை சர்வதேச ஆர்த்ரைடிஸ் தினமாக அனுசரித்து வருகிறது உலக சுகாதார நிறுவனம்.

ஆர்த்ரைடிஸ் பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. மூட்டுப்பிடிப்பு ஆண்களைக்காட்டிலும் பெண்களையே அதிகமாகத் தாக்குகிறது. இது பொதுவாக நாற்பது வயதிற்கு மேல் ஏற்படுகிறது. அதிகமாக உணர்ச்சி வசப்படுவதாலோ, அல்லது உடலை அதிகமாக வருத்திக் கொள்வதாலோ, குளிர் பிரதேசங்கள், மலைகளில் வசிப்பதாலோ, உடலை அதிகக் குளிருக்குட்படுத்திக் கொள்வதாலோ, மற்றும் பரம்பரைக் காரணத்தினாலோ ஏற்படலாம்.

ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கோள்கள் அமைந்திருக்கும் இடத்திற்கும் அவர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கும் முக்கிய தொடர்பு ஒருவருக்கு ஆர்த்ரைடிஸ் எனப்படும் நோய் ஏற்படுவதற்கான ஜோதிட ரீதியான காரணங்களை ஜோதிடர் அஸ்ட்ரோ சுந்தரராஜன் என்பவர் தெரிவித்துள்ளார்.

சனிபகவான்

சனிபகவான்

ஆர்த்ரைடிஸ் எனும் முடக்குவாத நோய்க்கு ஜாதகத்தில் மந்தன் எனப்படும் சனைஸ்வரனே முக்கிய பங்கு வகிக்கிறான். என்றாலும் சந்திரன், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்களின் நிலையும் வாத நோயை ஏற்படுத்துகின்றது.

சந்திரன், சுக்கிரன், புதன் மற்றும் சனி பலமிழந்த நிலையில் இனைவு பெறுவது, அசுப பரிவர்தனை பெறுவது, 6,8,12 வீடுகளோடு லக்னம் மற்றும் லக்னாதிபதி சம்மந்தபடுவது , காலபுருஷனுக்கு மூன்றாம் வீடாகிய மிதுனத்தில் சனி, சுக்ரன் போன்ற கிரகங்கள் நிற்பது, ஜாதகத்தின் மூன்றாம் வீட்டில் வாத கிரகங்களான சனி, சுக்ரன், புதன், சந்திரன் போன்ற கிரகங்கள் நிறபது போன்றவை வாத நோயை தெரிவிக்கிறது.

சூரியன் சனி தொடர்பு

சூரியன் சனி தொடர்பு

எலும்பிற்கு காரக கிரகமான சூரியன் சனியுடன் எந்தவிதத்தில் தொடர்பு கொண்டாலும் எலும்பு மற்றும் வாத நோய் ஏற்படுகிறது. மேலும் சூரியன் 6,8,12 வீடுகளுடன் தொடர்பு பெறும்போது ஜாதகருக்கு வாதநோய் ஏற்படுகிறது. சூரியன், சந்திரன் செவ்வாயுடன் சேர்க்கை பெற்று லக்னத்தில் நின்றாலும் வாதநோய் ஏற்படுகிறது. பத்தாம் வீடு முதுகு மற்றும் கால் மூட்டுக்களை பற்றி கூறுவதால் பத்தாம் வீட்டில் சனி,செவ்வாய் இனைவு பெற்றாலும் பத்தாம் வீடு சனியின் வீடாகி அங்கு செவ்வாய், ராகு போன்ற கிரகங்கள் நின்றாலும் தீவிர மூட்டுவலி ஏற்படுகிறது.

வாதநோய்க்கான கிரக சேர்க்கைகள்

வாதநோய்க்கான கிரக சேர்க்கைகள்

மூலநுல்களில் வாத நோய் ஏற்படுவது பற்றி கூறப்பட்டுள்ளது. அதன்படி சனி லக்னத்தில் நின்று செவ்வாய் 5,7,9 வீடுகளில் நிற்பது சனியும் சந்திரனும் 12ம் வீட்டில் நிற்பது. சூரியன், சந்திரன் மற்றும் சனி லக்னத்தோடு தொடர்பு கொள்வது வாத நோயை ஏற்படுத்தும்.

மிதுனத்தில் சனி, குரு லக்னத்தில் நின்று சனி மூலை ராசியான மிதுனத்தில் அல்லது 7ம் வீட்டில் நிற்பது.
சனியும் சந்திரனும் 6 அல்லது 9ம் வீட்டில் நிற்பது. 6. சனியும் ராகுவும் 2அல்லது மூன்றாம் வீட்டில் நிற்பது.

சூரியன் கடகத்தில் நின்று சனியுடன் எந்தவிதத்திலாவது தொடர்பு கொள்வது. லக்னாதிபதி லக்னத்திலேயே நின்று சனி 6ம் வீட்டில் நிற்பது. சூரியனும் சுக்ரனும் தசா புத்தி நாதர்களாக அமைவது. 10. சனியும் செவ்வாயும் 6 அல்லது 12 வீட்டில் நிற்பது வாத நோயை ஏற்படுத்தும்.

வாஜ்பாஜ் ஜாதகம்

வாஜ்பாஜ் ஜாதகம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களும் மூட்டுவலியால் அவதியுற்றது அனைவரும் அறிந்ததே. அவருடைய ஜாதகத்திலும் சனி 12ல் சுக்ரனுடைய வீட்டில் உச்சம் பெற்று நிற்கிறது இதுவே அவருக்கு வாத நோய் ஏற்பட காரணமாகிறது.

முடக்கு வாதத்தை போக்க பரிகாரங்கள்

முடக்கு வாதத்தை போக்க பரிகாரங்கள்

சனிஸ்வரபகவானுக்கு உகந்த சனி கிழமை மற்றும் புதனுக்கு உகந்த புதன் கிழமைகளில் எண்ணை (நல்லெண்ணை) தேய்த்து குளிப்பது. பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எண்ணை ஸ்நானம் செய்யலாம். இதில் நல்லெண்ணை சனியின் காரகம் பெற்று மூட்டுகளுக்கு உயவுப்பொருளாக (Greece) பயன்படுவது குறிப்பிடத்தக்கது.

ஊனமுற்றவர்களுக்கு உதவி

ஊனமுற்றவர்களுக்கு உதவி

சனிஸ்வர பகவானுக்கு சனிக்கிழமைகளில் எள் விளக்கேற்றுவது, முதியவர் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவி (செருப்பு, குடை கைத்தடி) செய்வது, திருநள்ளாறு, திருநாரையூர், குச்சனுர், பொழிச்சலூர் போன்ற சனி ஸ்தலங்களுக்கு அவ்வப்பொது சென்று வருவது.

சூரியன், புதன்

சூரியன், புதன்

சூரிய நமஸ்காரம் செய்வது மற்றும் ஆதித்ய ஹ்ருதயம் போன்ற ஸ்லோகம் சொல்வது மற்றும் கேட்பது எலும்புக்கு காரகனாம் சூரியனுக்கு உகந்தது.

புதனுக்கு உகந்த புதன் கிழமைகளில் பெருமாள் கோயில் அல்லது நவகிரக புதன் சன்னதிகளில் நரம்பை பலப்படுத்தும் புரத சத்து மிகுந்த பாசிப்பயறு சுண்டல் செய்து சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கு விநியோகம் செய்துவிட்டு சாப்பிடுவது.

மருந்துகள் மூலம் பலன்

மருந்துகள் மூலம் பலன்

வாத ராக்ஷஷ ரஸம் போன்ற ஆயுர்வேத மருந்துகளை தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக்கொள்வது. மேலும் ஆயுர்வேத மருந்து மற்றும் சனியின் காரகம் பெற்ற ப்ரபஞ்சன விமர்தன தைலம், கொடன்சுகாதி தைலம், நாராயணாதி தைலம், கற்பூராதி தைலம், பிண்ட தைலம் போன்றவற்றை மிதமான சூட்டில் தேய்த்து விடுவதும் சிறந்த பலனளிக்கும்.

இயற்கை மருத்துவம்

இயற்கை மருத்துவம்

முருங்கைக் கீரையோடு உப்பு சேர்த்து வேகவைத்து தொடர்ந்து 15 நாட்களுக்குச் சாப்பிட்டால் மூட்டு வலி குணமாகும்.

வாதநாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, 3 பல் பூண்டு, திப்பிலியுடன் (சுண்டைக்காய் அளவு) விளக்கெண்ணெய் விட்டு வதக்கி அரைத்துச் சாப்பிட்டால் முடக்குவாதம் குறையும்.

முடக்கத்தான், வாதநாராயணன் இரண்டையும் சம அளவு எடுத்து, ஒரு பல் பூண்டு, 2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, அதிகாலையில் தொடர்ந்து சாப்பிட்டால் மூட்டு வலி குறையும். பிரண்டை இலை, முடக்கத்தான் இலை, சீரகம் மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து அரைத்துக் காலையில் சாப்பிட்டால் மூட்டு வலி, மூட்டுத் தேய்வு, இடுப்பு வலி போன்ற பிரச்சினைகள் குறையும். பரட்டைக் கீரை, வாதநாராயணன் கீரை, முடக்கத்தான் கீரை மூன்றையும் சம அளவு எடுத்துச் சாறு பிழிந்து, அதில் நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சித் தைலமாக்கித் தேய்த்தால், கை, கால், இடுப்பு, மூட்டு வலிகள் குறையும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+