நெல்வரத்து அதிகரிப்பால் குறையும் அரிசிவிலை: நுகர்வோர்கள் மகிழ்ச்சி
நெல்லை: நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில் அறுவடை முடிந்து நெல்வரத்து அதிகரித்துள்ளதால் அரிசி விலை குறையத்தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்தது. பொன்னி அரிசி ஒரு கிலோ 56 ரூபாய் வரை விற்பனையானது. சாதாரண அரிசி ரூபாய் 40 ரூபாய்க்கு குறையாமல் விற்றது.
தென்மாவட்டங்களில் நெல் விளைந்தாலும் அரிசி,காய்கறி, அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் சற்று அதிகமாகவே இருக்கும். இந்த நிலையில் அரிசி விலை ஜெட்வேகத்தில் சென்றதால் மக்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடுமையான மின்தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான அரிசி ஆலைகள் முடிக்கிடந்தன. இதைப்போல் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழைபொய்த்துப் போனதால் நெல்வரத்து கணிசமாக குறைந்தது. கிணற்றுப் பாசனம், ஆற்றுப் பாசனம் மூலம் விவசாயம் மேற்கொண்ட விவசாயிகளும், நெல்லை தங்கள் தேவைக்காக தேக்கி வைத்திருந்தனர்.இதனால் அரிசி ஆலைகள்அதிபர்கள்,ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து வரும் நெல்லை மட்டுமே நம்பி இருந்தனர்.
நெல்லை,தூத்துக்குடியில் 34ரூபாய் விற்ற டீலக்ஸ் பொன்னி, விறுவிறுவென விலையேறி, 56 ரூபாய் வரை சென்றது. தற்போது பல மாவட்டங்களில் அறுவடை தொடங்கியுள்ளதாளும்,மின் தட்டுப் பாடு என்பது முற்றிலும் குறைந்துள்ளதாலும், மாநிலத்தில் உள்ள அனைத்து அரிசி ஆலைகளுக்கும் நெல் அரவைக்காக தட்டுப்பாடின்றி வந்து கொண்டிருக்கிறது.
சிவகங்கை, தஞ்சாவூர் மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் தஞ்சாவூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் இங்கு நெல் வரத்து தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தற்போது பெய்ய ஆரம்பித்துள்ளதால்..ஐப்பசி மழையை நம்பி, ஆடியில் விதைத்த விவசாயிகள் பெய்துள்ள மழையால் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தேக்கி வைத்திருந்த நெல் விற்பனைக்கு வருவதால், ஆலைகளுக்கு நெல் வரத்து உள்ளது. இதைப்போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போல் இல்லாமல் தற்போது மின் உற்பத்தியும் அதிகரித்து இருப்பதால் தடையில்லா மின்சாரமும் வந்துகொண்டிருப்பதால் அரிசி ஆலைகள் முழு நேரமும் இயங்க தொடங்கியுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில்அரிசி கிலோவுக்கு, ஒன்று முதல், மூன்று ரூபாய் வரை குறைந்துள்ளது.கடந்த வாரம் 45 ரூபாய்க்கு விற்ற டீலக்ஸ் பொன்னி, தற்போது, 42 ரூபாய்க்கும் 35 ரூபாய்க்கு விற்ற கோ- 45 அரிசி 33 ரூபாய்க்கும், 35 க்கு விற்ற சி.ஆர்., (இட்லி அரிசி), 34 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதே போல் நெல்லின் விலையும் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் 1400ரூபாய்க்கு விற்பனை ஆன நெல்லின் விலை தற்போது 800ரூபாயாக குறைந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆலங்குளம்,பாவூர்சத்திரம்,கீழப்பாவூர்,ஆவுடையானூர்,பகுதியில் உள்ள அரிசி ஆலைகள் முழு அளவில்செயல் படத்தொடங்கியுள்ளதால் தீபாவளிக்கு பிறகு அரிசி விலை மேலும் குறையும். தீபாவளியையொட்டி அரிசிவிலை குறையத்தொடங்கியுள்ளது பொதுமக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications