துணிச்சலான முடிவு.. இந்தியா வல்லரசாக போகிறது.. மோடி அறிவிப்புக்கு ஆர்ஜே.பாலாஜி புகழாரம்
500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என மோடி அறிவித்திருப்பது சுதந்திரத்துக்கு பின் இந்தியாவில் எடுக்கப்பட்ட மிகத் துணிச்சலான ஒரு முடிவு என ரேடியோ ஜாக்கி பாலாஜி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சென்னை: ரூபாய் நோட்டுகள் குறித்த மோடியின் அறிவிப்பு இந்தியர்கள் அனைவரும் பெருமை படக்கூடிய வேண்டிய ஒரு விஷயம் என ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்.
ரேடியோ ஜாக்கியும் நடிகருமான பாலாஜி இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என பிரதமர் அறிவித்திருப்பதை எண்ணி மக்கள் பயப்பட வேண்டாம், பதட்டப்பட வேண்டாம், ஏடிஎம் மையங்களில் கூட வேண்டாம் என்பதை வலியுறுத்தியுள்ள அவர் அதன் அவசியத்தையும் தெரிவித்துள்ளார்.
கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை இந்தியர்கள் அனைவரும் பெருமைபடக் கூடிய விஷயம் என தெரிவித்துள்ளார்.
மக்கள் பதட்டப்பட வேண்டாம், பயப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ள அவர் ஏடிஎம் மையங்களில் பணத்தை டெபாசிட் செய்ய நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளை மறுநாள் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்றும் அதுவரை அவசர உதவிக்காக அக்கம் பக்கத்தினரிடம் கடன் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
அவசர உதவி கேட்பவர்களுக்கு மக்கள் உதவ வேண்டும் என்று கூறியுள்ள பாலாஜி, மோடியின் இந்த அதிரடியால் இந்தியா 2020ல் நிச்சயம் வல்லரசாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications