பணம் கொடுத்தவர்களுக்கு ஏற்ப வாக்குகள் கிடைத்துள்ளது... கரு. நாகராஜன் புலம்பல்!
பணம் யார் அதிகம் கொடுத்தார்களோ அவர்களுக்கு ஏற்ப வாக்குகள் விழுந்துள்ளதாக ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை : பணம் யார் அதிகம் கொடுத்தார்களோ அவர்களுக்கு ஏற்ப வாக்குகள் விழுந்துள்ளதாக ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் முறையாக நடைபெறாததற்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளில் தொடர்ந்து தினகரன் முன்னிலையிலும்,அதிமுக இரண்டாவது இடத்திலும் உள்ளது. திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 3வது இடத்திலும் நான்காவது இடத்தில் நாம் தமிழர் கட்சியும் உள்ளது.

தேசிய கட்சியான பாஜக வாக்குப்பெட்டியில் இரண்டாவது இடத்தில் இருந்தாலும் வாக்குகள் முடிவில் கடைசி இடத்தில் உள்ளது. யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று மக்கள் வாக்களித்த நோட்டாவும் பாஜகவை முந்திவிட்டது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக வேட்பாளர் கரு. நாகராஜன், பணம் யார் அதிகம் கொடுத்தார்களோ அவர்களுக்கு ஏற்ப வாக்குகள் விழுந்துள்ளது. பணத்தை மட்டுமே நம்பி வெற்றி பெறுவதில் பாஜகவுக்கு நம்பிக்கையில்லை என்று கூறினார்.
தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்பதற்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு. பாஜக திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க பாடுபடுவோம். பாஜகவுக்கு மட்டுல்ல, திமுக உள்பட ல்லா கட்சிகளுக்குமே வாக்குகள் குறைந்துள்ளன என்று நாகராஜன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
