விடிய விடிய வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா.. கட்சியினர் கமிஷன் அடிப்பதாகவும் 'பஞ்சாயத்து'
விடிய விடிய ஆர்.கே நகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை : ஆர்.கே நகரில் வாக்காளர்களுக்கு விடிய விடிய பணப்பட்டுவாடா நடந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் தேர்தல் மீண்டும் ரத்தாகுமோ என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ஆர்.கே நகரில் வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சி வாக்காளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் நடக்க இருந்த தேர்தல் வாக்காளர்களுக்கு அதிக அளவு பணப்பட்டுவாடா நடந்ததால், தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்து உள்ளது.
வாக்காளர்களுக்கு அ.தி.மு.க.,வும், டி.டி.வி தினகரன் தரப்பும் போட்டி போட்டுக்கொண்டு பணம் கொடுப்பதாக தேர்தல் அதிகாரிகளிடம் தி.மு.க புகார் அளித்து உள்ளது. நேற்று ஆர்.கே நகர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அ.தி.மு.க.,வினரை தி.மு.க தொண்டர்களே போலிஸாரிடம் பிடித்துக்கொடுத்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு முதல் விடியவிடிய வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தேர்தல் ஆணைய அதிகாரிகள், பறக்கும் படை, துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டையும் மீறி இந்த பட்டுவாடா நடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் வாங்குவதும் தவறு என்கிற நிலையில், ஆர்.கே நகர் மக்கள் வேறு ஒரு கவலையில் ஆழ்ந்து உள்ளனர். ஓட்டுக்கு ரூபாய் ரூபாய் 6000 கொடுப்பதாக சொல்லிவிட்டு, பணம்கொடுப்பவர்கள் ரூபாய் 4000 மட்டுமே கொடுத்ததாகவும், மீதம் 2000 ரூபாயை அவர்களே கமிஷனாக எடுத்துக்கொண்டதாகவும் வாக்காளர்கள் புலம்பி வருகிறார்கள். தொடர்ந்து பணப்பட்டுவாடா புகார் எழுவதால் மீண்டும் ஆர்.கே நகர் தேர்தல் தள்ளி வைக்கப்படுமோ என்கிற கேள்வி மக்களிடையே எழுந்து உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications