காயலாங்கடைக்கு செல்லப்போவது கையாலாகாத அரசுதான் : டிடிவி தினகரன் பொளேர்
காயலாங்கடைக்கு செல்லப்போவது கையாலாகாத அரசு தான் என்று டி.டி.வி தினகரன் குறிப்பிட்டு உள்ளார்.
சென்னை : காயலாங்கடைக்கு செல்லப்போவது கையாலாகாத அரசு தான்; இது தேர்தலுக்கு பிறகு நிச்சயம் நடக்கும் என்று ஆர்.கே. நகர் தேர்தல் பிரச்சாரத்தில் டி.டி.வி தினகரன் தெரிவித்து உள்ளார்.
வருகிற 21ம் தேதி ஆர்.கே நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் சுயேச்சை வேட்பாளராக டி.டி.வி தினகரன் களம் இறங்க உள்ளார். இவருக்கு தேர்தல் ஆணையம் பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கி உள்ளது.

ஆர்.கே நகரில் காவல்துறை ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், தனது அணி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் மிரட்டுவதாகவும், தேவை இல்லாமல் கைது செய்வதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் புகார் டி.டி.வி தினகரன் மனு அளித்தார்.
இதனைத்தொடர்ந்து மாலையில் இருந்து மணலி, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அதில் மணலியில் வாக்காளர்களிடம் பேசிய தினகரன், இந்த தேர்தலில் வெற்றி பெற ஆளும்கட்சி அனைத்து வித அடக்குமுறைகளையும் கையாண்டு வருகிறது.
மாநில அரசின் மோசமான நடவடிக்கைகளால் குக்கர் சின்னம் தாய்மார்களிடம் அமோக ஆதரவு பெற்றுள்ளது. அதனால், நிச்சயம் தேர்தலுக்கு பிறகு கையாலாகாத அரசு காயலாங்கடைக்கு செல்லப்போவது உறுதி என்று தினகரன் தெரிவித்து உள்ளார்.
டிடிவி தினகரனின் "குக்கர்" கடைசியில் காயலாங்கடைக்குத்தான் செல்லும் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications