ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா : தேர்தல் ஆணையம் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய ஹைகோர்ட் நோட்டீஸ்
ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையம் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை: ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காவல்துறையின் விசாரணை குறித்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மரணமடைந்ததைத் தொடர்ந்து அவர் வெற்றி பெற்ற ஆர்.கே. நகர் சட்டசபை தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இடைத்தேர்தலின் போது இதைத் தொடர்ந்து அத்தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்க எந்த மாநிலத்திலும் நியமிக்கப்படாத மைக்ரோ அப்சர்வர்களையும் தேர்தல் ஆணையம் நியமித்தது. அதையும் மீறி அவ்வப்போது பறக்கும் படைகள் ரோந்து மேற்கொண்ட நிலையில் கோடிக்கணக்கான பணத்தை பறிமுதல் செய்தனர். எனினும் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை.

பணப்பட்டுவாடா
அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் லாட்ஜூகளிலும், பேருந்துகளிலும், நூதனமான முறைகளிலும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. தேர்தல் ஆணையத்திற்கு ஏராளமானோர் புகார்களை அனுப்பினர்.

ஐடி ரெய்டு
இதனிடையே வருமான வரித்துறையினர் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் ரெய்டு நடத்தினர். அப்போது அவரது வீட்டில் ரூ.89 கோடி ரொக்கமும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறையினர் அனுப்பிய அறிக்கையை தொடர்ந்து ஆர்.கே நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

வழக்குப் பதிவு செய்ய உத்தரவு
பணப்பட்டுவாடா தொடர்பாக ஆளும் கட்சி மீது புகார் அளித்தும் காவல்துறையினர் புகாரை பெற்றுக் கொள்ளவில்லை என்று எதிர்கட்சியினர் குற்றம் சாட்டினர். இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டப்படி வழக்கறிஞர் எம்.பி. வைரக்கண்ணன் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பினார். வைரக்கண்ணனுக்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்குப் பதிவு செய்யப்படவில்லை
ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் வைரக்கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

உயர்நீதிமன்றத்தில் விசாரணை
அந்த மனு மீதான விசாரணை இன்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் முன்பு இன்று விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. காவல்துறையினரின் வழக்கு பதிவு, விசாரணை குறித்த ஆவணங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
-
பூவை ஜெகன்மூர்த்தி மீதான கடத்தல் வழக்கு தள்ளுபடி! கடுமையாக வாதம் வைத்த போலீஸ்.. மனுதாரர் ட்விஸ்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications