ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: ஜெ உடன் போட்டியிட 21 பேர் மனுத்தாக்கல்
சென்னை: ஆர்.கே.நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 21 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்று மட்டும் 6 பேர் பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனராம்.
தமிழகத்தில் காலியாக உள்ள சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இம்மாதம் 27ம்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. சார்பில் முதல்வர் ஜெயலலிதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., த.மா.கா., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் உள்ளிட்ட பிரதான எதிர்கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தனது வேட்பாளர் சி.மகேந்திரனை களமிறக்குகிறது.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் கடந்த 3ம்தேதி தொடங்கியது. முதல்நாள் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். வெள்ளிக்கிழமையன்று முதல்வர் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தார்.
6ஆம் தேதியான இன்று தமிழ்மாநில கட்சி சார்பில் போட்டியிடும் ஆர்.சி.பால்கனகராஜ் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தேசிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் சசிபெருமாளும், அகில இந்திய காமராஜ் காங்கிரஸ் கட்சி சார்பில் இசக்கிமுத்துவும் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
அவர்களை தொடர்ந்து, தமிழ்மாநில திமுகவை சேர்ந்த மணிமாறன், தேசிய மக்கள் கட்சி சார்பில் வெற்றிச்செல்வன் ஆகியோரும் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
இவர்களைத் தவிர தனஞ்செழியன் என்பவரும் சுயேட்சையாக ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதற்காக இதுவரை மொத்தம் 21 வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 10ம் தேதி கடைசி நாளாகும். இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள், வரும் 11ம் தேதி பரிசீலனை செய்யப்படவுள்ளன. மனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 13ம் தேதி கடைசி நாளாகும். வாக்குப் பதிவு ஜூன் 27ம் தேதியாகும்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications