ஆர்.கே. நகரில் 'சதி' அணிக்கு வாக்களிக்க வேண்டாம்- நடிகர் ஆனந்தராஜ் வேண்டுகோள்
ஆர்.கே. நகரில் டிடிவி தினகரனைத் தவிர வேறு யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்களியுங்கள் என்று நடிகர் ஆனந்தராஜ் கூறியுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகரில் சதி அணிக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் டிடிவி தினகரனைத் தவிர வேறு யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் என்றும் நடிகர் ஆனந்தராஜ் கூறியுள்ளார். 'சதி' அணிக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் ஆர்.கே. நகர் வாக்காளர்களை யாராலும் விலைக்கு வாங்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக அம்மா அணி வேட்பாளராக டிடிவி தினகரன் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி வேட்பாளராக மதுசூதனன் களமிறங்கியுள்ளனர்.

திமுகவின் மருதுகணேஷ், தேமுதிகவின் மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லோகநாதன், தீபா, நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
நடிகர் ஆனந்தராஜ்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.கே.நகர் வாக்காளர்களை யாராலும் விலைக்கு வாங்க முடியாது என்றும் கூறினார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து கருத்து கூறியுள்ள நடிகர் ஆனந்தராஜ், டிடிவி தினகரனைத் தவிர வேறு யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் என்று தெரிவித்தார்.
சதி அணி ( சசிகலா - தினகரன்)
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சதி அணிக்கு வாக்களிக்க வேண்டாம் என கூறினார் ஆனந்தராஜ். சசிகலாவையும், தினகரனையும் இணைத்து சதி அணி என்று தெரிவித்தார் நடிகர் ஆனந்தராஜ்.
ஜெயலலிதாவிற்கு துரோகம்
ஆர்.கே. நகரில் தினகரனை வெற்றி பெறச் செய்தால் ஜெயலலிதாவுக்கு ஆர்.கே. நகர் மக்கள் துரோகம் செய்தது போலாகும் என்றும் கூறியுள்ளார். எனவே டிடிவி தினகரனைத் தவிர்த்து யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் என்று கூறினார் நடிகர் ஆனந்தராஜ்.
தரம் தாழ்ந்த அரசியல்
மேலும் பேசிய அவர், நடிகர் சரத்குமார் திடீரென்று டிடிவி தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்து விட்டு பேட்டி அளித்துள்ளார். அதிமுகவை பிரிக்க மற்றவர்கள் சதி செய்வதாக கூறியுள்ளார். இது தரம் தாழ்ந்த அரசியல் என்று கூறினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்
வருமான வரி சோதனை செய்ய வரும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதுதான் முறை என்றும் தெரிவித்தார் நடிகர் ஆனந்தராஜ். ஆர்.கே. நகர் மக்கள் சதி அணியைத் தவிர்த்து யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் என்றும் தெரிவித்தார். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுகவில் இருந்து விலகுவதாக கூறிய ஆனந்தராஜ், கடந்த சில மாதங்களாகவே சசிகலா, டிடிவி தினகரனுக்கு எதிராகவே கருத்துக்கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications