மதுராந்தகம் அருகே கார்- லாரி மோதல்: 3 பேர் பலி
மதுராந்கம் அருகே கார் மற்றும் லாரி மோதியதில் 3 பேர் பலியாகிவிட்டனர்.
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: மதுராந்தகம் அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியாகிவிட்டனர்.
மதுராந்தகத்தை நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த கார் கொளப்பாக்கத்தை அடைந்தது. அப்போது அங்கு பழுதாகி நின்றிருந்த லாரி மீது மோதியது.

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. பின்னர் இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications