ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கோரி... சைதாப்பேட்டை சப்வே அருகே மறியல்... போக்குவரத்து முடக்கம்

சென்னை சைதாப்பேட்டையில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சைதாப்பேட்டை அரங்கநாதன் சப்வேயில் ஏராளமான மக்கள் திரண்டு சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் போராட்டம் மற்றும் எதிர்ப்புகளால் ஆளும் அதிமுக அரசு செய்வறியாமல் திணறி வருகிறது.

Road blockaded in Chennai saidapet to demand permanent solution for jallikattu

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நிரந்தர சட்ட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை அரங்கநாதன் சப்வே அருகில் அப்பகுதி பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு நிரந்த சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் பீட்டாவை நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்றும் முழக்கமிட்டு வருகின்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+