வேலை கிடைக்கவில்லை.. சென்னையில் கணவன் மனைவி வேடத்தில் கொள்ளையடிக்க சென்ற பொறியியல் பட்டதாரிகள்
சென்னை தி நகரில் இரண்டு ஆண் பொறியியல் பட்டதாரிகள் கணவன் மனைவி வேடமிட்டு கொள்ளையிட்டு இருக்கிறார்கள்.
சென்னை: சென்னை தி நகரில் இரண்டு ஆண் பொறியியல் பட்டதாரிகள் கணவன் மனைவி வேடமிட்டு கொள்ளையிட்டு இருக்கிறார்கள்.
சென்னை தி நகரில் நெருக்கமான குடியிருப்பு பகுதியில் உள்ள வெங்கடேசன் என்பவர் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அங்கு இருந்த வீடு ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் கத்தியை காட்டி அங்கு இருந்த தம்பதியை மிரட்டி உள்ளார்கள்.

இருவரும் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளார்கள். இந்த நிலையில் அந்த வீட்டில் இருந்த கணவன் மனைவி இருவரும் உடனே வீட்டை விட்டு ஓடி இருக்கிறார்கள்.
இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீஸ் வருவதற்கு முன்பே அக்கம் பக்கத்து வீட்டார்கள் சேர்ந்து அவர்கள் இருவரையும் பிடித்துள்ளார்கள்.
இவர்கள் இருவரும் பொறியியல் பட்டதாரிகள். இவர்களை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இதில் ஒருவரது பெயர் சுஜன் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படித்துவிட்டு வேலை கிடைக்காததால் இப்படி கொள்ளை அடிக்க ஆரம்பித்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளார்கள். இதற்கு முன் இவர்கள் கொள்ளையடித்தார்களா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications