தூத்துக்குடி வங்கியில் கொள்ளை முயற்சி.. லாக்கரை உடைக்க முடியாததால் பணம் தப்பியது
தூத்துக்குடி: தூத்துக்குடி பாண்டியன் கிராம வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. லாக்கர் கதவை உடைக்கமுடியாத காரணத்தினால் பல லட்சம் தப்பியது.
தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் பாண்டியன் கிராம வங்கி கிளை உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 தினங்களாக வங்கிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.

இன்று காலை பாண்டியன் கிராம வங்கியின் கிளை மேலாளர் கண்ணன் உள்ளிட்ட வங்கி அதிகாரிகள் வங்கியை திறந்து உள்ளே சென்றனர். அப்போது வங்கியின் ஜன்னல்கதவு உடைக்கப்பட்டு வங்கியின் உள்ளே பொருட்கள் சிதறி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வங்கி அதிகாரி தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து காவல்துறையினர் சம்ப இடத்திற்கு விரைந்து வந்தனர். வங்கியின் கீழ்புறம் உள்ள இரும்புகடையின் வழியாக கொள்ளையர்கள் புகுந்து வங்கியின் ஜன்னல் கதவை வளைத்து கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
வங்கியின் பீரோ மற்றும் மேஜையில் பணத்தை தேடிய கொள்ளையர்கள் பணம் ஏதுமில்லாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதன்பின்னர் கொள்ளையர்கள் வங்கியின் லாக்கரை உடைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் லாக்கரை திறக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.
கொள்ளையர்களின் கைரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர்.லாக்கரை உடைக்க முடியாத காரணத்தினால் அதில் இருந்த பல லடசம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் தப்பியது. இது குறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கியின் சிசிடிவியில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்வையிட்டும் போலீசார் துரித விசாரனை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 31ம் தேதி பட்டப்பகலில் அரசு மருத்துவமனை செவிலியரை துப்பாக்கியால் சுட்டு நகையை பறித்து சென்ற கொள்ளையர்கள் இன்னும் பிடிபடாத சூழலில் வங்கியில் நடந்துள்ள கொள்ளை சம்பவம் மாநகர மக்கள் மத்தியில் தொடர்ந்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications