தென் மாவட்டங்களை கலக்கி வந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜா சென்னையில் கைது! துப்பாக்கிகள் பறிமுதல்
Recommended Video

சென்னை: பிரபல ரவுடி ராக்கெட் ராஜா சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனர் வெங்கடேச பண்ணையார், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கடந்த 2003ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி சென்னையில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையை சேர்ந்த வெங்கடேச பண்ணையாருக்கு நெருக்கமானவர் ராக்கெட் ராஜா. இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம், திசையன்விளை அடுத்த, ஆனைகுடி.

போலீஸ் தவிப்பு
கட்டப் பஞ்சாயத்து, கொலை மிரட்டல் உட்பட ராக்கெட் ராஜா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டாலும் அதற்கான ஆதாரம் இல்லை, எனவே அவரை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வந்தனர். இதனிடையே, வெங்கடேச பண்ணையாரின் சித்தப்பா மகன் சுபாஷ் பண்ணையாருடன் இணைந்து ராக்கெட் ராஜா ரவுடியிசத்தில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலையடுத்து தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர்.

சிக்கவில்லை
அதேநேரம், தான் சார்ந்த சமூக மக்களுக்கு தோள் கொடுப்பதாக ராக்கெட் ராஜாவுக்கு தென் மாவட்டங்களில் நற்பெயர் இருந்ததால் போலீசாரால் அவரை நெருங்க முடியவில்லை. மும்பை உள்ளிட்ட நகரங்களில் ராக்கெட் ராஜா மறைந்திருந்ததாக கூறப்பட்டது. உளவுத்துறை மூலமும், அவர் நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு வந்தது.

சென்னையில் கைது
இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், ராக்கெட் ராஜா மற்றும் கூட்டாளிகள் நால்வர் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிகளை மீட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

என்கவுண்டர் குற்றச்சாட்டு
தன்னை என்கவுண்டர் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக ராக்கெட் ராஜா குற்றச்சாட்டு தெரிவித்து, சில மாதங்கள் முன்பு வீடியோ வெளியிட்டவர் ராக்கெட் ராஜா. இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதால், தென் மாவட்டங்களில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications