யார்ரா அவன் முரட்டு ஆளா ஓட்றான்.. தனிமையில் கள்ளக்காதல் ஜோடி.. பொள்ளாச்சி இளைஞர்கள் செய்த சம்பவம்
பொள்ளாச்சி: மாட்டிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் திருடன்...திருடன்... என்று சத்தம் போட்டவர்கள், ராத்திரியில் தனிமையில் இருந்த கள்ளக்காதல் ஜோடி யை போலீசில் சிக்க வைத்திருக்கிறார்கள். இந்த சம்பவத்தால் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே மைனராக இருக்கும் போதே திருமணம் நடந்தது. அவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளார்கள். இந்த தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண், தனது கணவரை பிரிந்து குழந்தைகளுடன் பொள்ளாச்சி அருகே பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு சேலத்தை சேர்ந்த திருமணம் ஆகாத 29 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்த வாலிபர் பொள்ளாச்சி பகுதியில் மின்சார வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவாக மாறி இருக்கிறது.
சம்பவம் நடந்த அன்று இரவு அந்த சேலம் இளைஞரை, திருமணமான பெண் தனது வீட்டிற்கு அழைத்தார். அதன் படி சேலம் இளைஞர் ராத்திரி நேரத்தில் யாருக்கும் தெரியாமல் வந்துள்ளளார். அவர்கள் 2 பேரும் வீட்டில் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதை பார்த்த சிலர் வேண்டும் என்றே அவர்களை சிக்க வைக்கும் நோக்கத்தில் திருடன்... திருடன்... என சத்தம் போட்டுள்ளார்கள். அதை கேட்டு அந்த பெண்ணின் வீட்டு முன்பு பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்த தகவலின் பேரில் வடக்கிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது 2 பேரும் காதலிப்பதாகவும், அந்த பெண் அழைத்த தால் இளைஞர் வந்ததும் தெரியவந்தது. இதனால் போலீசார் அந்த இளைஞரை விடுவித்தனர்.
இதற்கிடையே திருடன் திருடன் என்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கூச்சலிட்டு அசிங்கப்படுத்தியால் பொள்ளாச்சி பெண்ணை திருமணம் செய்ய சேலம் இளைஞர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அந்த பெண் திடீரென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்
உடனே அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பொள்ளாச்சி வடக்கிபாளையம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications