நடிகை பண்ணை வீட்டில்.. காதல் ஜோடிக்கு நடுவே படுத்து சில்மிஷம் செய்து கைதான ரூம் பாய் தப்பியோட்டம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கூவத்தூரில் உள்ள பண்ணை வீட்டில் காதல் ஜோடியிடம் அத்துமீற முயன்ற ரூம் பாயை விருந்தினர்கள் தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் காயமடைந்த அந்த ரூம் பாய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
கல்பாக்கம் அருகே கூவத்தூரை அடுத்துள்ள பரமன்கேனி பகுதியில் பட நடிகை சந்தியாவின் கணவர் வெங்கடேசன் நடத்தி வருகிறார். இந்த பண்ணை வீட்டில் நீச்சல் குளத்துடன் வில்லா வீடுகள் உள்ளன.
சனி, ஞாயிறுக்கிழமைகளில் வார இறுதி நாட்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த பலர் இந்த வில்லா வீடுகளில் தங்குகிறார்கள். அது போல் காதல் ஜோடி, புதுமணத் தம்பதி என இந்த வில்லாவில் தங்குகிறார்கள்.

அந்த வகையில் இந்த வீடுகளில் தங்குவதற்காக சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த இன்டீரியர் டெகரேட் ஒப்பந்ததாரர் ராமசந்திரன் (25) என்பவர் தனதி நண்பர்களுடன் தங்குவதற்காக 3 அறைகள் பதிவு செய்து மொத்தம் 8 பேர் அந்த வில்லாவுக்கு வந்தனர். ஒரு அறையில் ராமசந்திரனும் அவருடைய காதலி சோனாலிக்கா (22) ஆகியோர் தங்கியிருந்தனர்.
இந்த நிலையில் அந்த பண்ணை வீட்டில் ரூம் பாயாக சீக்கினாங்குப்பம் பகுதியை சேர்ந்த சுபாஷ் (23) பணியாற்றி வந்தார். அவர் ராமசந்திரன் தங்கியுள்ள அறைகளை பராமரிக்கும் பொறுப்பை ஏற்று சுத்தம் செய்து கொடுத்துள்ளார். இவர்கள் தங்கியுள்ள அறையில் உள் பக்கம் தாழிட்டுக் கொண்டாலும் வெளியே திறக்கும் வசதி கொண்ட தாழ்ப்பாள் இருந்தது.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ராமசந்திரனும் சோனாலிக்காவும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சுபாஷ் அந்த அறைக்குள் புகுந்து இருவருக்கும் நடுவில் படுத்துக் கொண்டு சோனாலிக்காவிடம் காதலன் போல் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தெரிகிறது. காதலன் இது போல் செய்ய மாட்டாரே என சந்தேகமடைந்த சோனாலிக்கா சுதாரித்துக் கொண்டு அறையின் லைட்டை போட்டுள்ளார். உடனே சுபாஷ் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டார்.
அப்போது ராமசந்திரன் தூங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த சோனாலிக்கா கட்டிலின் கீழ பார்த்துள்ளார். அப்போது அங்கு சுபாஷ் மறைந்திருந்ததை கண்டு சப்தமிட்டு தனது காதலனிடம் கூறியுள்ளார். இதையடுத்து சுபாஷை வெளியே இழுத்து வந்த ராமசந்திரன் தர்ம அடி கொடுத்துள்ளார். அதற்குள் ராமசந்திரனின் நண்பர்களிடம் இதுகுறித்து தகவல் கூறிய நிலையில் அவர்களும் வந்து சுபாஷை தாக்கினர்.
இதையடுத்து சுபாஷ் குறித்து ராமசந்திரன் கூவத்தூர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தார். அப்போது போலீஸார் விரைந்து வந்து சுபாஷை கைது செய்தனர். அவருக்கு காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவரை செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். சுபாஷை தாக்கியதாக அவருடைய உறவினர்கள் ராமசந்திரன் உறவினர்கள் புகார் கூறினர்.
இந்த நிலையில் சுபாஷின் செல்போன் வாங்கி போலீஸார் பரிசோதனை செய்த நிலையில் பண்ணை வீட்டில் தங்கும் பெண்கள் குளிக்கும் வீடியோவையும் உடை மாற்றும் வீடியோவையும், நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவையும் எடுத்திருந்தது தெரியவந்தது. இதே போல் வில்லாவில் தங்கும் மற்ற பெண்களிடமும் காதலன் போல் சில்மிஷத்தில் சுபாஷ் ஈடுபட்டாரா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சுபாஷின் உடலில் இருந்த வெட்டுக் காயங்கள் ஆறியவுடன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீஸார் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் வெட்டுக் காயங்கள் ஆறிய நிலையிலும் சுபாஷ் தனக்கு உடல்நிலை சரியாக இல்லை என்றே அடம்பிடித்ததாக தெரிகிறது. இதையடுத்து போலீஸார் அந்த இடத்தை விட்டு சென்றதும், சுபாஷ் அங்கிருந்து தப்பிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகிறார்கள். மேலும் அவருடைய போனில் 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதால் அவர்களிடம் சுபாஷ் மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டாரா என்பதை விசாரணை நடத்த போலீஸார் அவரை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications