தீவிரமாகத் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பினுவின் கூட்டாளிகள் மூன்று பேர் காவல்நிலையத்தில் சரண்
ரவுடி பினுவின் கூட்டாளிகள் மூன்று பேர் திருமுல்லைவாயில் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.
Recommended Video

சென்னை: போலீஸாரால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த ரவுடி பினுவின் கூட்டாளிகள் மூன்று பேர் இன்று திருமுல்லைவாயில் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, ரவுடி பினுவின் பிறந்தநாள் விழா சென்னை பூவிருந்தவல்லி அருகே மலையம்பாக்கத்தில் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், அதிரடியாகச் செயல்பட்டு அங்கிருந்த 76 ரவுடிகளைக் கைது செய்தனர். ரவுடி பினு உட்பட சில ரவுடிகள் மட்டும் தப்பிச்சென்றனர்.
அங்கிருந்த தப்பிய ரவுடி பினு, சில தினங்களுக்குப் பிறகு போலீஸில் சரணடைந்தார். பினுவிடம் நடத்திய விசாரணையில் எதிர்க்கோஷ்டியைச் சேர்ந்த ரவுடி ராதாகிருஷ்ணன் போட்டுத்தள்ள ரவுடிகள் திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து தலைமறைவான ரவுடி ராதாகிருஷ்ணனையும் போலீஸார் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில், ராதாகிருஷ்ணன் இரு தினங்களுக்கு முன் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

தப்பிச்சென்ற மற்ற ரவுடிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதனையடுத்து தேடப்பட்டு வந்த ரவுடி பினுவின் கூட்டாளிகள் விக்னேஷ், கனகு ராஜ் மறும் சரவணன் ஆகியோர் திருமுல்லைவாயில் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.












Click it and Unblock the Notifications