For Daily Alerts
ரவுடி கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை.. சேலம் நீதிமன்றம் அதிரடி
ரவுடி மோகன் கொலை வழக்கில் சேலம் நீதிமன்றம் இன்று திங்கள் கிழமை 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

சேலத்தில் 2010 ஆம் ஆண்டு ரவுடி மோகன் என்பவர் முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு சேலம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று திங்கள் கிழமை ரவுடி மோகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முரளி, கார்த்தி, ஆறுமுகம், மூர்த்தி, செல்வன் உள்ளிட்ட 8 பேருக்கு சேலம் மாவட்ட கூடுதல் அமர்வு மூன்றாவது நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!