ரவுடி ஸ்ரீதரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறதா?
காஞ்சிபுரம்: கம்போடியா நாட்டில் தற்கொலை செய்துகொண்ட ரவுடி ஸ்ரீதரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவது குறித்து தற்போது எதுவும் தெரிவிக்க முடியாது என காஞ்சிபுரம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொலை, ஆள்கடத்தல் என பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரவுடி ஸ்ரீதர். தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

Recommended Video

ஆனால் போலீசார் தரப்பில் இருந்து இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஸ்ரீதரின் உடலை பெற அவரது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கம்போடியா சென்றுள்ளனர்.
ஸ்ரீதரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அங்குள்ள இந்திய தூதரகத்தின் உதவியை அவர்கள் நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீதர் போலி பாஸ்போர்ட்டில் சென்று தங்கியிருந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அவரது உடலை கொண்டு வர காவல்துறை சார்பில் எந்த நடவடிக்கையும் எடுப்படவில்லை என காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேநேரத்தில் அவரது தற்கொலையை உறுதி செய்து விரிவான தகவலை வெளியிடும் நடவடிக்கைகள் நடைபெற்றுவருவதாக கூறியுள்ளன.
இதனால் ஸ்ரீதரின் உடலைக் கொண்டு வருவது மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட அனைத்து தகவலும் கிடைக்க இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ரவுடி ஸ்ரீதரின் உடலைக் கொண்டுவ அவரது மகன் கம்போடியா புறப்பட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications