சென்னையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலருக்கு அரிவாள் வெட்டு.. 3 ரவுடிகள் கைது
சென்னை பூந்தமல்லி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரை அரிவாளால் வெட்டிய 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video

சென்னை: பூந்தமல்லி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரை அரிவாளால் வெட்டிய 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அருகே பூந்தமல்லியில் காவலர் அன்பழகன் என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார். அந்த வழியே மோட்டார் சைக்கிள் ஒன்று வந்துள்ளது.
அதில் 3 பேர் பயணம் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களை காவலர் அன்பழகன் தடுத்து நிறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த ரவுடிகள் காவலரை சரமாரியாக தாக்கினர்.

போலீஸ்க்கு அரிவாள் வெட்டு
அப்போது அந்த ரவுடிகளில் ஒருவன் தான் பதுக்கி வைத்திருந்த அரிவாளால் காவலர் அன்பழகனை ஓங்கி வெட்டினான். இதில் காவலர் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தப்பியோடிய போலீஸ்
இதையடுத்து மற்றொரு ரவுடி காவலரை தள்ளிவிட்டு தாக்கினான். அப்போது காவலர் அன்பழகள் ரவுடிகளிடம் இருந்து தப்பி ஓடியதால் உயிர் பிழைத்தார்.

அடையாளம்
இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பன்னீர்செல்வம், சுதீஷ்குமார் மற்றும் ரஞ்சித் என அடையாளம் காணப்பட்டு உள்ளது.

மக்கள் அச்சம்
தப்பியோட முயன்ற அந்த ரவுடிகளை திருவேற்காடு போலீசார் கைது செய்துள்ளனர். போலீஸையே ரவுடிகள் வெட்டிய சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications