ரயிலில் பட்டாசு கொண்டு செல்வோரை கண்காணிக்க 5 தனிப்படைகள்... எஸ்.பி. தகவல்
சென்னை: தீபாவளி பண்டிகையின் போது ரயிலில் பட்டாசுகள் கொண்டுசெல்வோரை கண்காணிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே எஸ்.பி. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்லும் மக்கள் இங்கிருந்து இனிப்பு வகைகள், துணிமணிகளை வாங்கிச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். அதேநேரத்தில் ஆர்வக்கோளாரில் சிலர் பட்டாசுகளை இங்கேயே வாங்கிக் கொண்டு ரயிலில் எடுத்துச் செல்கின்றனர். இதனால் பல அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளன.

இதனைத் தடுக்கும் வகையில் ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டு உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் ரயில்களில் பட்டாசு கொண்டு செல்வதை கண்காணிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு பி.விஜயகுமார் கூறுகையில்,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பட்டாசுகள் கொண்டு செல்வதை கண்காணிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், 3 போலீசார் இருப்பார்கள். இவர்கள் சாதாரண உடையிலும் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
ரயில்களில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள், பட்டாசுகள், மண்எண்ணெய், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். ரெயில் பயணிகளுக்கு எந்த உதவியாக இருந்தாலும் ‘1512' என்ற 24 மணி நேர உதவி எண் மற்றும் 9962500500 (வாட்ஸ்-அப்) எண்ணும் சேவையில் உள்ளது. இந்த எண்ணை தொடர்புகொள்ளும் போது, போலீசாரின் உடனடி உதவி கிடைக்கும். சென்னை சென்டிரல், எழும்பூர், காட்பாடி, சேலம் மற்றும் கோவை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. என அவர் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications