For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ.15 லட்சம் மதிப்பிலான 1000 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்: திண்டுக்கல் ரயில்வே போலீஸ் அதிரடி

1 டன் குட்கா புகையிலையை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 1 டன் குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிஜாமுதீனிலிருந்து மதுரை வரை செல்லும் நிஜாமுதீன் விரைவு ரயில்,திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு நேற்று வந்து சேர்ந்தது. அப்போது, அந்த ரயிலிலிருந்து சரக்குகள் இறக்கி வைக்கப்பட்டன.

RPF seizes 15 lakh worth gutkha in dindigul

அப்போது ரயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீசார், சந்தேகத்துக்கிடமாக இருந்த 12 சாக்குபைகளை இருந்ததை கவனித்தனர். எனவே அவற்றினை போலீசார் பிரித்து பார்த்து சோதனையிட்டதில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றினை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பப்பட் மொத்த குட்காவின் மதிப்பு 1 டன் அதாவது 1000 கிலோ எனவும் அவற்றின் மதிப்பு ரூ,15 லட்சம் எனவும் கூறப்படுகிறது.மேலும் சரக்கு பைகளின் மேல் எந்த முகவரியும் குறிப்பிடப்படவில்லை என்பதால் இந்த குட்கா புகையிலையை யார் அனுப்பியது, யாருக்காக அனுப்பியது, எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

English summary
Railway police seized 1 tonne gutka at Dindigul railway station. Railway police, who were patrolling the railway station, searched and seized 12 suspicious suspects. In that case, they were confiscated after the government found that they had banned gutka tobacco products. Their value is Rs. 15 lakh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X