ரவுடிகள் வேட்டை.. தமிழ்நாட்டில் 3 நாட்களில் 844 ரவுடிகள் கைது.. தமிழக போலீஸ் வெளியிட்ட முக்கிய தகவல்!
சென்னை: தமிழகத்தில் கடந்த 3 நாள்களில் 844 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையில், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 267 கிலோ கஞ்சா, 2,476 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இவற்றின் மதிப்பு ரூ. 1.43 கோடி என்றும் தெரிவிக்கப்படுள்ளது.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாநிலத்தில் வசித்து வரும் பொதுமக்களின் நலன் கருதி அமைதியான, பொதுமக்களுக்கு பாதுகாப்பான ஒரு சூழ்நிலையை உறுதி செய்ய வேண்டுமென்ற தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, ரௌடிகளின் நடவடிக்கைகள், போதை மருந்துப் பொருட்கள் பயன்பாடு மற்றும் இதர மனமயக்கப் போதைப் பொருட்களின் பயன்பாட்டினை சமூகத்திலிருந்து துடைத்தெறிய வேண்டுமென்று காவல் துறை உறுதி பூண்டுள்ளது.

குற்றவாளிகளின் நடவடிக்கைகளை முற்றிலுமாகக் கட்டுப்படுத்துதல், குற்றச் செயல்களைத் திட்டமிட்டு நிறைவேற்றுகின்ற குழுக்களின் நடவடிக்கைகளைக் குலைத்தல் போன்ற உறுதியான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு திறம்பட பராமரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மூன்று நாட்களாக அதுபோன்று எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, 15,349 ரவுடிகள் (12,650-வரலாற்றுப் பதிவேடு ரவுடிகள் மற்றும் 2,699-வரலாற்றுப் பதிவுறா ரவுடிகள்) அடையாளம் காணப்பட்டு சோதனையிடப்பட்டனர். அவர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணை காரணமாக, 3,246 ரவுடிகள் (வரலாற்றுப் பதிவேடு ரவுடிகள் -2,468 மற்றும் வரலாற்றுப் பதிவுறா ரவுடிகள் -778) காவல் துறையினரால் பிடிக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை மற்றும் சோதனை நடைபெற்று வருவதுடன், அவர்களில் 844 (வரலாற்றுப் பதிவேடு ரௌடிகள் -488 மற்றும் வரலாற்றுப் பதிவுறா ரவுடிகள் -356) பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், காவல் துறையினால் மேற்கொள்ளப்பட்ட மேலே குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக போதைப் பொருட்கள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் சட்டத்தின் கீழ் 294 வழக்குகள் மாநிலம் முழுதும் பதிவு செய்யப்பட்டு 419 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், வெளிச்சந்தையில் ரூ. 1,43,78,200 மதிப்புடைய 267.756 கிலோகிராம்கள் எடையுடைய கஞ்சா மற்றும் 2,476 போதை மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இத்தகைய நடவடிக்கைகள், ரவுடிகள் மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்தல், அவர்களுடைய குழுச் செயல்பாடுகளைக் குலைத்தல் மற்றும் ரவுடிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல் மற்றும் மாநிலத்தின் எந்தவொரு பகுதியிலும் திட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற அமைப்புகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற குற்றவாளிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டு வருகின்ற முனைப்பான, தொய்வில்லாத நடவடிக்கைகள் தமிழ்நாடு காவல் துறையின் தொடர் நடவடிக்கைகளின் ஓர் அங்கமாகும்.
பொது அமைதி மற்றும் குடிமக்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்தல் மற்றும் அனைத்து வகையிலான குற்றச் செயல்கள் மற்றும் சமூக விரோதச் செயல்களுக்கு எதிராக உரிய சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க தமிழ்நாடு காவல் துறை உறுதி பூண்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பனை விவசாயியை எஸ்.ஐ இசக்கிராஜா சுட்ட வழக்கு.. சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு! -
“விளையாட்டு முக்கியம் பிகிலு”.. அரசு பள்ளிகளில் 1,625 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications