For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கன்னியாகுமரி வேன் விபத்தில் 4 மாணவிகள் பலி - முதல்வர் ரூ.1 லட்சம் நிதியுதவி

தக்கலை அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்ததுடன், தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் நடந்த சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தலா 1 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:

Rs. 1-lakh relief for the kin of Takkalai van accident victims

கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், பத்மனாபபுரம் கிராமம், தேசிய நெடுஞ்சாலையில், தக்கலை அருகே புலியூர்குறிச்சி என்னும் இடத்தில் 24.3.2017 அன்று ஸ்ரீ அய்யப்பா மகளிர் கல்லூரி மாணவிகளை ஏற்றி தக்கலை நோக்கி வந்து கொண்டிருந்த மகேந்திரா வேனும், நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் மோதிக் கொண்டதில், வேனில் பயணம் செய்த, கல்லூரி மாணவிகள் பரைக்கோடு, வைகுண்டபுரத்தைச் சேர்ந்த அர்ஜுணன் என்பவரின் மகள் மஞ்சு, திருவிதாங்கோடு, புங்கரையைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகள் சிவரஞ்சினி, சக்தி நகரைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகள் தீபா மற்றும் மண்டைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மனைவி சங்கீதா ஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சாலை விபத்தில் மூன்று மாணவிகள் காயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

English summary
Chief Minister Edapadi Palanisamy has announced condoled the death of 4 persons in the van-train collision Puliyur Kurichi in Kanyakumari district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X