ரூ. 1.50 எக்ஸ்ட்ரா கட்டணம் வசூலித்த அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ. 17,000 அபராதம்
நாமக்கல்: கூடுதல் கட்டணம் வசூலித்ததால், அரசு போக்குவரத்து கழகத்துக்கு, 17 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. இவர் கடந்த 2013-ம் ஆண்டு தன் மனைவியுடன் குமாரபாளையத்தில் இருந்து சங்ககிரிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டல பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

அப்போது, பேருந்துக் கட்டணமாக ரூ. 10 பாலசுப்ரமணியத்திடம் வசூலிக்கப் பட்டது. ஆனால், குமாரபாளைத்தில் இருந்து சங்ககிரிக்கு, 8.50 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும்.
இது தொடர்பாக நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு பயனீட்டாளர் சங்கம் மூலம், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றத்தில் பாலசுப்ரமணி வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை குறைதீர் மன்ற தலைவர் அய்யப்பன், உறுப்பினர் மலர்க்கொடி ஆகியோர் விசாரித்தனர். விசாரணையின் முடிவில், "பயணியிடம் கூடுதலாக வசூல் செய்த 1.50 ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும். மேலும் பயணிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக 5,000, ரூபாயும், வழக்கு செலவுக்கு 2,000 ரூபாயும், நுகர்வோர் நல நிதிக்கு 10 ஆயிரம் ரூபாயும் அரசுப் போக்குவரத்து கழகம் செலுத்த வேண்டும்' என உத்தரவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications