ராமஜெயம் கொலை, ரயில் கொள்ளையில் துப்பு கொடுத்தால் பரிசு - சிபிசிஐடிபோலீஸ் அறிவிப்பு
ராமஜெயம் கொலை, சேலம் ரயிலில் பழைய ரூபாய் நோட்டு கொள்ளை ஆகிய வழக்குகளில் துப்பு துலக்க தகவல்களை அளிப்பவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என சி.பி.சி.ஐ.டி போலீஸ் அறிவித்துள்ளது.
திருச்சி: ராமஜெயம் கொலை, சேலம் ரயிலில் பழைய ரூபாய் நோட்டு கொள்ளை ஆகிய வழக்குகளில் துப்பு துலக்க தகவல்களை அளிப்பவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என சி.பி.சி.ஐ.டி போலீஸ் அறிவித்துள்ளது.
திருச்சி மாநகரத்தை சேர்ந்த ராமஜெயம் 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அதிகாலை நடைபயிற்சிக்காக செல்லும் போது கொலை செய்யப்பட்டார். இந்த கொலையாளிகளை பிடிக்க முதலில் 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் தனிப்படையால் வழக்கில் துப்பு துலக்க முடியவில்லை.
இதையடுத்து ராம ஜெயம் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. டி.எஸ்.பி. மலைச்சாமி தலைமையில் தற்போது 16 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

5 ஆண்டுகளாக திணறல்
ராமஜெயம் கொலையை பொறுத்தவரை போலீசாருக்கு கிடைத்த முக்கிய தடயம் அவர் பயன்படுத்திய செல்போன்களின் எண்கள் மட்டுமே. அந்த எண்களுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டவர்கள், இரவு நேரத்தில் தொடர்பு கொண்டு பேசியவர்கள் பட்டியல் தனித் தனியாக தயாரிக்கப்பட்டுள்ளது. தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து விட்டனர் சிபிசிஐடி போலீசார். கொலை நடந்து 5 ஆண்டுகளாகியும் கொலையாளியின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை.

ரயிலில் பணம் கொள்ளை
இதே போல கடந்த ஆண்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி சேலத்தில் இருந்து சென்னை வந்த சேலம்-சென்னை விரைவு ரயில் பார்சல் வேனில் எடுத்து வரப்பட்ட பணத்தில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளையும் தமிழக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை விசாரணை செய்து வருகிறது.

ரூ. 2 லட்சம் வெகுமதி
இந்த வழக்கில் துப்பு துலக்க பயனுள்ள தகவல்களை அளிப்பவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
இந்த வழக்கு குறித்து தொலைபேசி, செல்போன் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக பொதுமக்கள் தகவல் தரலாம். அவர்களின் பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.

தொடர்பு கொள்ள எண்கள்
இதுகுறித்த தகவல் தர 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள வேண்டிய பெண்கள் : 044-28511600, செல்போன்-வாட்ஸ்அப் எண்கள்: 99400 22422, 99400 33233 ஆகும். இனியாவது சிபிசிஐடி போலீசாருக்கு துப்பு கிடைக்குமா பார்க்கலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications