திரும்ப பெறப்படும் ரூ. 2000.. அரசு பேருந்துகளில் பயன்படுத்த தடை.. தமிழக போக்குவரத்து கழகம் உத்தரவு!
சென்னை: நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பபெற ஆர்பிஐ முடிவு செய்துள்ள நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க கூடாது என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பபெற ஆர்பிஐ முடிவு செய்துள்ளது.
வங்கிகளில் 2000 ரூபாய்களை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் ஆர்பிஐ உத்தரவிட்டு உள்ளது.
ஆனால் இதன் அர்த்தம் இந்த பணம் செல்லுபடியாகாது என்பதல்ல. இந்த பணம் செல்லுபடியாகும். கையில் உள்ளவர்கள் பணத்தை கடைகள் எப்போதும் போல வாங்கிக்கொள்ள வேண்டும்.

அதை வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும். எந்த வங்கியில் வேண்டுமானாலும் கொடுத்து பணத்தை மாற்றிக்கொள்ள முடியும். 20 ஆயிரம் ரூபாய் வரை ஒரு நாளுக்கு மாற்ற அடையாள அட்டை தேவை கிடையாது.
அதற்கு மேல் ஒரு நாளில் மாற்ற வேண்டும் என்றால் அடையாள அட்டை தேவை. இந்த நோட்டு செப்டம்பர் 30ஆம் தேதிவரை செல்லுபடியாகும். அதன்பின் இந்த பணம் மொத்தமாக புழக்கத்தில் இருந்து நீக்கப்படும்.
ரிசர்வ் வங்கி சட்டத்தின் 24(1) பிரிவின் கீழ் இந்த ரூபாய் நோட்டுகள் நீக்கப்பட்டு உள்ளன.
திரும்பி செல்ல வேண்டும்:இதனால் மக்கள் பலரும் கைகளில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் திருப்பி கொடுத்து வருகின்றனர்.
நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பபெற ஆர்பிஐ முடிவு செய்துள்ள நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க கூடாது என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிகள் 2000 ரூபாய் கொடுத்தால் அதை வாங்க கூடாது என்று அறிவிக்கப்பட்டது.

முன்னதாக டாஸ்மாக்கில் இதே போன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டதாக செய்திகள் வந்தன. ஆனால் அந்த செய்திகள் உண்மை இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி மறுத்தது குறிப்பிடத்தக்கது.
செல்லாது:கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி திடீர் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இதன் காரணமாக அப்போது வழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து இருக்கிறது.
அப்போது 1000 ரூபாய்க்கு பதிலாக 2 ஆயிரம் ரூபாய் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பபெற ஆர்பிஐ முடிவு செய்துள்ளது.
நகை கடைகள்:இந்த நிலையில் இந்தியாவில் உள்ள பல்வேறு நகை கடைகள் அதிக அளவில் தங்கங்களை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாடுகளில் இருந்தும், நகை கடைகளுக்கு நகை விற்பனை செய்யும் டீலர்களிடம் இருந்தும் இவர்கள் நகைகளை வாங்கி உள்ளனர்.

மக்கள் பலர் பயந்து கொண்டு நகைகளை வாங்குவார்கள் என்பதால் ஸ்டாக் வைத்துக்கொள்ள இப்படி இந்திய நகை கடைகள் நகைகளை கூடுதலாக வாங்கி வைத்துள்ளனர். இருப்பினும், 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது காணப்பட்ட சூழ்நிலையைப் போல இப்போது இல்லை.
கையில் இருக்கும் காசை மாற்றிக்கொள்வதற்காக இப்போது மக்கள் இடையே பீதி இல்லை என்று நகைக்கடை அமைப்பான ஜிஜேசி தெரிவித்துள்ளது. கடந்த முறை பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட போது கையில் உள்ள காசை மாற்ற மக்கள் கூட்டம் கூட்டமாக நகை வாங்கினார்கள்.
ஆனால் இப்போது பலர் கையில் 2 ஆயிரம் ரூபாய் இல்லை. அதனால் மக்கள் யாரும் இதை மாற்ற நகை கடைகளுக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications