150 கிராம் தங்கம் கடத்தி வந்த 10 விமான பயணிகளுக்கு ரூ. 4.50 கோடி அபராதம்!
சென்னை: சிங்கப்பூரிலிருந்து வந்த விமான பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அவர்களில் 10 பேர் 150 கிராம் வரை தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பத்து பேருக்கும் தலா ரூ. 45 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதையடுத்து தற்போது சுங்க இலாகா அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

சிங்கப்பூர் பயணிகள்
சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவு சிங்கப்பூரிலிருந்து 3 விமானங்கள் வந்தன.

அதிரடி சோதனை
இந்த விமானங்களில் பெருமளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்திருந்தது. இதையடுத்து சுங்க இலாகாவினரும், மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

27 பயணிகளிடம் தீவிர சோதனை
இந்த விமானங்களில் வந்த பயணிகளில் சந்தேகத்திற்கு இடமான 27 பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

150 கிராம் தங்கம் சிக்கியது
அப்போது 10 பேரிடம் கடத்தல் தங்கம் இருந்தது தெரிய வந்தது. மொத்தமாக 150 கிராம் தங்கம் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

அதிரடி அபராதம்
இதையடுத்து 10 பேருக்கும் தலா ரூ. 45 லட்சம் என்று மொத்தமாக ரூ. நாலரை கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications