குப்பையில் போட்ட ரூ.4 கோடி... போலீசார் தேடியும் சிக்காத பணம்.. கோவையில் பரபரப்பு
4 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள் கோவையில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவையில் ரூ.4 கோடி மதிப்பிலான பணம் குப்பையில் வீசப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இதனால் போலீசார் பணத்தைத் தேடி அலைந்தனர். ஆனால் எங்கும் பணம் கிடைக்கவில்லை. இதனால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடை பயிற்சி தளம் உள்ளது. இங்கு இரவு சிலர் 4 கோடி ரூபாயை மூட்டையாக கட்டி காரில் கொண்டு வந்து குப்பை தொட்டியில் போட்டு விட்டு சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகள் கொட்டப்பட்டிருப்பதாகவும் இது கணக்கில் காட்டப்படாத கருப்பு பணம் என்றும் தகவல் பரவியது.

இதனால் பரபரப்படைந்த போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியும் பணம் கிடைக்கவில்லை. பணத்தை சிலர் கட்டு கட்டாக தூக்கி சென்று விட்டதாக கூறப்படுகிறது. வாட்ஸ் ஆப் மூலம் ரூ.4 கோடி ரூபாய் குப்பையில் வீசப்பட்டதாக வதந்தி பரவியதாக கூறப்படுகிறது.
கணக்கில் காட்ட முடியாத, பல கோடி ரூபாயை பலர் பதுக்கி வைத்திருக்கிறார்கள். தங்கம், ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்கள், ஹாவாலா மோசடி கும்பல் உள்ளிட்டோர் பல கோடி ரூபாயை பதுக்கி வைத்திருக்கிறார்கள். இந்த பணம் ரோடு, குப்பை தொட்டிக்கு வர போகிறது என வாட்ஸ் ஆப்பில் வேகமாக வதந்திகள் பரவி வருகிறது. இதனால் போலீசார் அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். குப்பை தொட்டியில் பணம் கிடப்பதாக யாரோ புரளி கிளப்பி வருவதாக போலீசார் குற்றம் சாட்டி வருகின்றனர்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications